Karthi - Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!
Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மாரி செல்வராஜ் கார்த்தி காம்போ:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பிசியாக நடத்தி வருகிறார். இந்த நிலையில், கார்த்தியின் புதிய படம் குறித்த அப்டேட் கடந்த வாரம் வெளியானது.
தமிழ் சினிமாவில் சமூகநீதி பேசும் படங்களை இயக்குபவர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இப்படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்தார். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்திய மாரி செல்வராஜின் படைப்புகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஷூட்டிங் எப்போது?
இதனைத் தொடர்ந்து வாழை என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, துருவ் விக்ரம் படத்தில் மாரி செல்வராஜ் கமிட் ஆகி உள்ளார். விளையாட்டை மையப்படுத்திய இப்படம் பற்றிய பேச்சு நீண்ட நாட்களாகவே இருது வரும் நிலையில், மாரி செல்வராஜ் இப்படத்தை விரைவில் இயக்க உள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படியான நிலையில், மார்ச் 7ஆம் தேதி மாரி செல்வராஜின் படம் குறித்த அப்டேட் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம் இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் படத்திற்கு பிறகு, கார்த்தி தற்போது பிரேம் இயக்கத்திலும், நலன் குமரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில், பிரேம் இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாக தெரிகிறது. தற்போது, நலன் குமரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ’கார்த்தி 28’ படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.