பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க.. மனம்திறந்த கார்த்தி பட நடிகை..
பட வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்ட் செய்ய கூறினார்கள் என்று நடிகை ஜீவிதா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகள் சிலருக்கு சிலரால் பாலியல் தொல்லைகளும், சீண்டல்களும் ஏற்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் கடைசி அக்காவாக நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஜீவிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரைப்படங்களில் நடிக்க எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வருகிறது. ஆனால், அவற்றை நான் பயன்படுத்திக்கொள்வதில்லை என்கிறார். அதற்காக அவர் கூறிய காரணம் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
நேரடியாக மேனஜர்கள் அவர்கள் கூறும் சிலரிடம் அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறினார்கள். அவர்கள் கூறும் நபர்களை அனுசரித்துப்போனால் நல்ல கதாபாத்திரமும், நல்ல சம்பளமும் கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆனால், நான் தைரியமான பெண் என்பதால் முகத்திற்கு நேராக முடியாது என்று கூறிவிடுவேன். என்னுடைய இடத்தில் வேறு பெண் இருந்தால் கண்டிப்பாக கஷ்டப்பட்டிருப்பார்கள். எல்லா இடங்களிலும் இதுபோன்று நடக்கிறது என்று கூற முடியாது. அனைத்து ஆர்ட்டிஸ்டுகளுக்கும் இதுபோன்று நடக்கிறது என்றும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜீவிதா தற்போது சன் தொலைக்காட்சியில் மதியம் 12.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் தொடரில் எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சிலர் இதுபோன்று கேட்டவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள் என்றும் வலியுறுத்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

