மேலும் அறிய

‛பருத்தி வீரனை உசுப்பி விட்டார்கள்...’ மதுரையில் பீல் பண்ண கார்த்தி!

”மிகவும் ஆசிரவதிக்கப்பட்டவனாகவும் , நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன் “ என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

பருத்தி வீரன் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. என்னதான் தனது அப்பா மற்றும் அண்ணன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்க நடிகர்களாக இருந்தாலும் , தனது கடின உழைப்பு மற்றும் தனித்துவ நடிப்பால் ரசிகர்களை முதல் படத்திலேயே வெகுவாக கவர்ந்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்தி தற்போது மணிரத்தினம் இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்னும் வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதுன் குறிப்பிடத்தக்கது. கார்த்தி தற்போது மண்வாசனை மணக்க மணக்க படங்களை உருவாக்கும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.


‛பருத்தி வீரனை உசுப்பி விட்டார்கள்...’ மதுரையில் பீல் பண்ண கார்த்தி!

இந்நிலையில் பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மதுரை பக்கம் சென்ற கார்த்திக்கு பொதுமக்கள் உற்ச்சாக வரவேற்ப்பு கொடுத்ததுடன் பருத்தி வீரன் படத்தில் அவர் நடித்ததை குறித்தும் அவரிடம் அதிகமாக பேசியுள்ளனர். இதனால் நெகிழ்ந்து போன கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ 14 வருடங்களுக்கு பிறகு விருமன் படத்திற்காக மதுரை வந்திருக்கிறேன்.மக்கள் இன்னும் பருத்திவீரன் படம் குறித்து பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஊர் மக்களின் அன்பு இன்னமும் மாறவில்லை.  மிகவும் ஆசிரவதிக்கப்பட்டவனாகவும் , நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன் “ என குறிப்பிட்டு அப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)


 2015 ஆம் வெளியான கொம்பன் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் கார்த்தி முத்தையா கூட்டணி  ஹைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. படத்தில் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது  மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.  படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.  இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார் அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் விருமன் படம் மூலம் மீண்டும் கிராமத்து கதையை கையில் எடுத்திருக்கும் முத்தையா அந்த படத்தை வெகுவாக நம்பியுள்ளாராம். விருமன் படத்தில்  கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண்,  பிரகாஷ்ராஜ்,  சூரி,  ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget