மேலும் அறிய

S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!

சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் மக்கள் இங்கு பல வசதிகளைக் கொண்ட தியேட்டர்களுக்கு செல்வவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படியான நிலையில் திருவான்மியூர் மக்களின் விருப்பமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டுள்ளது. 

சென்னை திருவான்மியூர் பகுதியின் அடையாளமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டது. விரைவில் அந்த தியேட்டர் இடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூடப்படும் சினிமா தியேட்டர்கள்

தமிழ்நாட்டையும், சினிமாவையும் என்றைக்கும் பிரிக்க முடியாத என்ற அளவுக்கு இங்கு வாழும் மக்களின் இரத்த ஓட்டத்தில் தியேட்டர்கள் கலந்திருக்கின்றன. ஒரு காலத்தில் நம்மை சுற்றி இயங்கிய, நாம் பார்த்து பார்த்து ரசித்த பல தியேட்டர்கள் இன்றைக்கு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களாக மாறி விட்டது. சில தியேட்டர்கள் அப்படியே மூடப்பட்டு சிதிலமடைந்து அப்படியே கிடக்கிறது. அதேசமயம் பல இடங்களிலும் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தியேட்டர்களை நிர்வாகம் செய்வதில் அதிகப்படியான செலவு உள்ளிட்டவை காரணமாக அதனை நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்து வருகிறது. 

சென்னையில் அடுத்தடுத்து தியேட்டர்கள் மூடல்

இப்படியான நிலையில் சென்னையில் அடுத்தடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டு வருவது உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் மக்கள் இங்கு பல வசதிகளைக் கொண்ட தியேட்டர்களுக்கு செல்வவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படியான நிலையில் திருவான்மியூர் மக்களின் விருப்பமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டுள்ளது. 

Also Read: Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!

திருவான்மியூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த தியேட்டர் ஆரம்பத்தில் ஒரு திரை கொண்டு செயல்பட்டு வந்தது. எல்.பி. சாலையில் அமைந்துள்ள இந்த தியேட்டர் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஸ்க்ரீன்கள் கொண்ட தியேட்டராக மாற்றப்பட்டது. எஸ்பிஐ, பிவிஆர் குழுமம் இந்த தியேட்டரை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தது. ஒரு ஸ்க்ரீன் பெரிய அளவிலும், இன்னொர்ஸ் ஸ்க்ரீன் சிறிய அளவிலும் இருந்தது. எனினும் திருவான்மியூர் மட்டுமல்லாது அடையாறு, ஓ.எம்.ஆர்., இசிஆர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் விருப்பமாகவும் திகழ்ந்தது. 

அங்கு வருவது என்ன?

இந்த நிலையில் வும்மிடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பிபிசிஎல் நிறுவனம் தியாகராஜா தியேட்டர் குடும்பத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி அந்த இடத்தில் வணிக வளாகம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் விற்பனை நிலையங்கள், திரையரங்கம், அலுவலகங்கள் ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப திட்டமிடப்பட்டு வருகிறதாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் ஆனந்த் வும்மிடி தெரிவித்துள்ளார். ரூ.500 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பகுதியாக வரும் தியேட்டர் தொடர்ந்து தியாகராஜா குடும்பத்தினரால் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடி பரப்பளவில் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறுவனம் சட்டப்பூர்வ அனுமதிகளைக் கோரும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget