Karnan Remake: கர்ணன் தெலுங்கு ரீமேக்; தனுஷாக பெல்லம் கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ்
கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் தனுஷின் கதாபாத்திரத்தில் நடிக்க பெல்லம்கொண்டாய் சாய் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் .
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், தனுஷ் மட்டுமின்றி லால், நடராஜன், யோகி பாபு மற்றும் ரஜீஷா விஜயன் என்று படத்தில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார் மாரி செல்வராஜ். பல விமர்சனங்களை தாண்டி தற்போது கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகின்றது.
இந்நிலையில் , வருகின்ற மே 8 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் வாங்கியுள்ளார் . படத்தில் ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வரும் என தெரிகிறது .