மேலும் அறிய

Rishab Shetty: “என்னோடது விவசாய குடும்பம்.. நம்மள காவல் தெய்வங்கள்தான் சமநிலையில் வைச்சிருக்கு..” - காந்தாரா ரிஷப் ஷெட்டி பேட்டி!

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன என ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி அளித்துள்ளார்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன என  ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி அளித்துள்ளார். 

‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sapthami Gowda 🧿 (@sapthami_gowda)

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம் விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார். 

அதன் போது அவர் பேசியதாவது.... “ காந்தாரா -  அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 


Rishab Shetty: “என்னோடது விவசாய குடும்பம்.. நம்மள காவல் தெய்வங்கள்தான் சமநிலையில் வைச்சிருக்கு..” - காந்தாரா ரிஷப் ஷெட்டி பேட்டி!

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்த படத்தை என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினேன். நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ... அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன். அப்பொழுது இருந்த சமூகம்... மக்களின் நம்பிக்கை...

நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள் என்றும், குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன். ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன்.

அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.  இது தற்போது எம்மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget