கமல் கட்டிப்பிடிச்சதால் 3 நாட்கள் குளிக்காத பிரபல ஹீரோ! யாருப்பா அந்த நடிகர்?
கமல்ஹாசன் தன்னை கட்டிப்பிடித்த 3 நாட்கள் குளிக்கவே இல்லை என்று பிரபல நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் சிவராஜ்குமார். கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வந்த ராஜ்குமாரின் மகன் இவர் ஆவார். இவர் சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
கமல், அமிதாப் ரசிகன்:
அப்போது, அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேட்டபோது அமிதாப்பச்சன், கமல்ஹாசன் பிடித்த நடிகர் என்று கூறினார். அப்போது, ரஜினிகாந்த் ஏன் பிடிக்காதா? என்று பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார்,
ரஜினி சாரை எனக்குப் பிடிக்கும் வேறு மாதிரி. ரஜினி நடிப்பு மிகவும் ஸ்டைல். எனக்கு ஒரு உத்வேகம் தந்தது கமல்ஹாசன், அமிதாப்பச்சன். எங்கப்பாவை நான் சொல்லிருக்கலாம். அவர் என் அப்பா. அவர் எனக்குள்ளே இருக்கிறார். அமிதாப்பச்சன், கமல்ஹாசன்னு சொல்லும்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
3 நாட்கள் குளிக்கவில்லை:
அமிதாப்பச்சனின் அணுகுமுறை எனக்குப் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகன். நான் பொண்ணா இருந்தால் அவரை கல்யாணம் பண்ணிருப்பேன். பல மேடைகளில் நான் பெண்ணாக பிறந்திருந்தால் உங்களையே திருமணம் செய்திருப்பேன் என்று சொல்லிருக்கேன்.
அவர் ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் என்று அவர் அப்பாவிடம் கேட்டார். அதற்கு என் பையன்தான் என்று கூறினார். அப்போது, உங்களிடம் ஒரு முறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா? என்று கேட்டேன். அவர் என்னை கட்டிப்பிடித்தார்.
மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. நான் அந்த மாதிரி ரசிகன். முதல்நாள் முதல் காட்சி நான் சென்று பார்ப்பேன். ராஜ்குமார் குடும்பம் என்று கால் பண்ணி 10 டிக்கெட் கேட்பேன். முதல் காட்சி பாக்கலனா திருப்பி பார்க்கவே முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவராஜ்குமார் கன்னட திரையுலகின் மூத்த மற்றும் பிரபல கதாநாயகன் ஆவார். இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் இவரது காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

