Shivaraj Kumar: “நானும் அந்த விஷயத்துல தனுஷ் மாதிரி தான்” - வெளிப்படையாக பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார்
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் கன்னட நடிகர் ஷிவராஜ் குமார்
நடிகர் தனுஷ் நடித்த படங்களை எல்லாம் பார்த்து விட்டு கருத்து தெரிவிப்பேன் என நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துளார்.
கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் , சிவராஜ் குமார் , பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷன் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம். இப்படத்தில் தனுஷுக்கு சகோதரனாக நடித்துள்ள சிவராஜ்குமார் இந்தப் படத்தில் நடித்த தனது அனுபவங்களை யூடியூப் சேனலுடன் பகிர்ந்துகொண்டார்.
நீங்க அப்டி என்ன பன்னீங்க
இந்த நேர்காணலில் ஜெயிலர் படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி அவர் பேசினார் “ இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் படங்கள் எனக்கு பிடிக்கும் . ரஜினி படத்தில் என்னை நடிக்க அவர் கேட்டபோது எனக்கு ரஜினி மேல் இருந்த மரியாதையாலும் நான் சம்மதித்தேன். ஆனால் நான் இந்தப் படத்தில் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை, இந்தப் படத்திற்கு எனக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து என் மனைவி என்னிடம் ஓவ்வொரு முறையும் கேட்கிறார். சுருட்டு பிடித்துக் கொண்டு கையில் ஒரு டிஸு பேப்பர் கொண்டு வந்ததை தவிர எதுவுமே பெரிதாக செய்யவில்லையே அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு என்று என் மனைவி கேட்கிறார். “
தனுஷ் அப்படியே என்னை மாதிரி
” நான் முதல் முறையாக என்னுடைய வஜ்ரகயா படத்தில் ஒரு பாடலை பாட தனுஷிடம் பேசினேன். இதற்கு பின் அவருடைய படங்களை அவ்வப்போது நான் பார்த்துவிட்டு அவரிடம் கருத்து தெரிவிப்பேன். அசுரன் படம் பார்த்தபோது நான் தன்னுடைய வயதிற்கு இப்படியான ஒரு கதாபாத்திரத்தை செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது. பல இடங்களில் தனுஷ் என்னை மாதிரி என்று நான் சொல்லி வருகிறேன். நான் என்னுடைய இளமை காலத்தில் சென்னையில் தான் இருந்தேன்.
அப்போது அந்த வயதில் என்னிடம் ஒரு வேகம் இருக்கும் அதே வேகத்தை நான் தனுஷிடம் பார்க்கிறேன். மேலும் ஒரு படத்தில் நான் நடிக்கிறேன் என்றால் அதற்காக என்னை ரொம்ப பயிற்சி எடுத்துக் கொண்டு எல்லாம் வரமாட்டேன். ஷூட்டிங் ஸ்பாடுக்கு சென்று அந்த நேரத்தில் நடிக்கும் அளவிற்கு எனக்கு பயிற்சி இருக்கிறது. என்னால் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்க முடியும் . இந்த ஐந்து படங்களிலு வேறு வேறான கதாபாத்திரங்களில் நான் நடிப்பேன். தனுஷும் அதே மாதிரி தான். அவர் செட்டுக்கு வரும் போது ரொம்ப கூலாக வருவார். நடிக்கத் தொடங்கினார் என்றால் அந்த இடத்தில் பயங்கரமாக இம்ப்ரோவைஸ் செய்வார். 35 ஆண்டுகளாக நான் நடித்து வருகிறேன் ஆனால் தனுஷுடன் நடிப்பது என்பது பயங்கர சவாலானது .
அவர் உங்கள் அருகில் நடிக்கும் போது உங்கள் பக்கத்து வீட்டுக் காரர் மாதிரி இருப்பார். நீங்களும் அதே அளவுக்கு உங்களை வெளிப்படுத்த வேண்டும். “ என்று சிவராஜ் குமார் கூறியுள்ளார்