Rishab Shetty: அரசுப் பள்ளியை தத்தெடுத்த ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி.. நெகிழ்ச்சியில் சொந்த ஊர் மக்கள்!
தனது சொந்த ஊரான கேரடியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார் காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி!
ரிஷப் ஷெட்டி
கடந்த 2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பான் இந்திய அளவில் வெற்றிபெற்று 400 கோடி வரை வசூல் செய்தது. தொன்ம கதையை மையப்படுத்தி எடுக்கப் பட்ட இந்தப் படம் நவீன சினிமாவில் குறிப்பாக கன்னட சினிமாவில் குறிப்பிடத் தகுந்த ஒரு இடத்தை பிடித்துள்ளது. வசூல் ரீதியாக கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக அதிக வசூல் ஈட்டிய படம் காந்தாரா. நடிகர் , இயக்குநர் என பன்முகத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் ஷெட்டி சமூக செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வருபவர்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன. இப்படியான நிலையில் தனது சொந்த ஊரான கேரடியில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளா நடிகர் ரிஷப் ஷெட்டி. ரிஷப் ஷெட்டியின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Celeb Rishab Shetty of Kantara fame adopts Kannada Government School in his hometown, Keradi.
— JyotiKarma🚩🇮🇳 (@JyotiKarma7) December 20, 2023
A real Celeb shows philanthropic spirit, not just glitz and glamor. pic.twitter.com/yDHZ8ktpn8
காந்தாரா 2
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற்று தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் படப்பிடிப்புத் தொடங்கியது. முதல் பாகம் 16 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட இருக்கிறது. முதல் பாகத்தில் சிறிய பகுதியாக இடம்பெறும் வரலாற்றுக் கதையை தீவிரமாக ஆராய்ச்சி செய்து முழு நீளப் படமாக ரிஷப் ஷெட்டி இயக்க இருக்கிறார். கி.பி. 300 முதல் கி.பி 400 காலக்கட்டத்தில் இந்தப் படத்தின் கதை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கதாநாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். மேலும் அச்யுத் குமார், ப்ரமோத் ஷெட்டி கிஷோர் ஆகியவர் நடித்திருந்தனர் மேலும் இந்த முறை தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இருந்து மிகப்பெரிய ஸ்டார்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.. காந்தாரா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்தப் பேச்சு எழுந்தபோது படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி அதை மறுத்துவிட்டார். ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருப்பதாலும் ரீமேக் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனத் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.