Kamalhassan: களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை.. கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் உலகநாயகன் கமலஹாசனின் திரைப்பணியைப் போற்றும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
உலக நாயகன் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது .
சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இந்த ஆண்டு வரும் மே 27-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி காஷல் ஆகியவர்கள் தொகுத்து வழங்க உள்ளார்கள்.இந்த நிகழ்வில் உலக நாயகன் கமலஹாசனின் திரைப்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியத் திரைப்பட பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்திய சினிமாவில் எந்த துறை என்று எடுத்துக்கொண்டாலும் அதில் கமலஹாசனிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும். நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர் தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். ஒவ்வொரு காலத்திலும் அடுத்த தலைமுறையினரால் வியந்து பார்க்கக் கூடியவராக இருக்கிறார் கமல்ஹாசன். தனது 63 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கமலஹாசன் இதுவரை வாங்கிய விருதுகளின் பட்டியலைப் பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மொத்தம் 232 படங்களில் நடித்துள்ளார் கமல். தற்போது இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்.
1960-இல் களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான தேசிய விருதை வென்றார் குட்டி கமல். மேலும் மூன்றாம் பிறை, நாயகன் , இந்தியன் ஆகிய திரைபடங்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றவர் கமலஹாசன்.1990-ஆம் ஆண்டில் இந்திய அரசு கமலஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இதுவரை மொத்தம் 18 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றிருக்கிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.இது எல்லாவற்றிற்கும் மேல் கடண்ட்ய்ஹ 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மபூஷன் விருதை கமலுக்கு வழங்கி கெளரவித்தது.
ஏற்கனவே இத்தனை விருதுக்கு மற்றும் பட்டத்திற்கு சொந்தக்காரரான கமலுக்கு தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளது சர்வதேச இந்திய திரைப்படம் விழா அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கமல். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தனது காட்சிகளுக்குக்கான டப்பிங்கை முடித்துள்ளார் கமல்ஹாசன்.தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.விரைவின் இந்தியன் 2 திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியன் திரைப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். நாயகன் திரைப்படத்திற்குப் பின் இவர்கள் இருவரும் இணைகிறார்கள்.