Indian 2 Box Office: அமெரிக்காவில் சாதனை படைத்த இந்தியன் 2.. ஒரே நாளில் ரூ.5 கோடி வசூல்..
Indian 2 Box Office Collection: உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2
கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று ஜூலை 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, பியூஷ் மிஸ்ரா மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், மற்றும் டெமி-லீ டெபோ உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தியன் 2 விமர்சனம்
#Indian2 [3.25/5] : Crusade against corruption continues both at the Macro and Micro level..
It's mostly #Ulaganayagan @ikamalhaasan show as #Indian Thatha..
His dialogues and action.. 🔥
Good role and performance by #Siddharth @anirudhofficial songs and music are par for…— Ramesh Bala (@rameshlaus) July 12, 2024
இந்தியன் 2 படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. பாடல் காட்சிகள் , ஆக்ஷன் காட்சிகள் , மற்றும் சண்டைக் காட்சிகள் உருவாக்கிய விதம் அதிகம் கவனமீர்க்கக் கூடிய அம்சங்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ALSO Read | Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
இந்தியன் 2 வசூல்
உலகளம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் இந்தியன் 2 வெளியாகி இருக்கிறது. தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியன் 2 அமெரிக்காவில் மட்டும் முதல் நாளில் சுமார் ரூ.5 கோடி 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் கரியரில் இதுவரை இல்லாத ஒரு வசூல் சாதனையை இந்தியன் 2 படம் படைத்துள்ளது.
#KamalHaasan's #Indian2 Opening Day Box Office Expectationshttps://t.co/2G8v4xLrfD
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 11, 2024
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியன் 35 முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் ஈட்டிய படமாக இந்தியன் 2 படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

