மேலும் அறிய

KH234: ஒன்றிணைந்த நாயகர்கள்.. கமல் - மணிரத்னத்தின் க்யூட் ஃபோட்டோவுடன் தொடங்கிய KH234 கொண்டாட்டம்!

வரும் நவ.7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் இணையும் KH234 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களுள் ஒன்றாக இன்றுவரை கொண்டாடித் தீர்க்கப்படும் திரைப்படம் நாயகன். இப்படத்துக்குப் பிறகு நல்ல நண்பர்கள், உறவுக்காரர்கள் என தங்கள் நட்பைத் தொடர்ந்த கமல் - மணிரத்னம் இருவரும், இடைபட்ட காலத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றவே இல்லை.

ரசிகர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் KH234 படத்தின் அப்டேட் சில மாதங்களுக்கு முன் வெளியானது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 21ஆம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெற்ற நிலையில், வரும் நவ.7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையில் கடந்தவாரம் அறிவித்தார். இந்நிலையில்,  தற்போது கமல் - மணிரத்னம் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ராஜ்கமல் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

“இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள், கொண்டாட்டம் தொடங்கட்டும்” என்ற கேப்ஷனுடன் கமல் - மணிரத்னம் இருவரும் பேசி சிரிக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளது.

இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. மற்றொருபுறம் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரகூல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா என பலரும் நடித்து வருகின்றனர்.

இதனிடையே இயக்குநர் ஹெச். வினோத் உடன் கமல்ஹாசன் கைக்கோர்த்துள்ள KH 233 படமும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: Coffee With Karan: ரன்வீருடன் காதல், வேறு நபர்களுடன் டேட்டிங்.. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் மனம் திறந்த தீபிகா படுகோன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget