மேலும் அறிய
Advertisement
KH 231- KH237: KH 231 முதல் KH 237 வரை.. கமல்ஹாசன் நடிப்பில் வரிசைகட்டி வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்!
KH231 - KH237: நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டணி அமைத்து பிரபல இயக்குநர்களுடன் வரிசைகட்டி நடிக்கும் கமல்ஹாசன்.
KH231-KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார்.
KH231 என்ற இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
Wishing our Ulaganayagan @ikamalhaasan sir a very happy birthday! It is wonderful to have had the chance to work with you again to bring Senapathy back! Hope you keep entertaining us and continue to inspire millions more! #indian2 pic.twitter.com/tGpA6In56I
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 7, 2023
அடுத்ததாக KH232 படமாக லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் “விக்ரம் 2” உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது கமல்ஹாசனின் KH233 அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு பட அப்டேட்கள் பெரிதாக எதுவும் இல்லை.
And it begins…#RKFI52 #KH233
— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE
இதற்கிடையே, 35 ஆண்டுகளுக்கு பிறகு KH234 படத்தில் மீண்டும் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் கமல்ஹாசன். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “தக் லைஃப்” என பெயரிடப்பட்ட இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.
Thank you @realradikaa for the wishes. https://t.co/918SwvCsPL
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2023
பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் “கல்கி 2898 AD” படம் கமல்ஹாசனின் 235ஆவது படமாகும். நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே, மிரட்டலான ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசன் வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவரது ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் அடுத்த பாகத்திற்காக இந்தியன் 3 எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் KH 236 படமாக இந்தியன் 3 இருக்கும் என கூறப்படுகிறது.
தொடந்து கமல்ஹாசன் நடிக்கும் KH237 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் KH237 படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், இருவரையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Proud to add two proven talents in their new avatar as directors for #KH237. Slay it, Masters Anbariv. Welcome to Raaj Kamal Films International again.#ActioninAction@RKFI #Mahendran @anbariv @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/uH07IsMVjd
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2024
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion