Vikram 75: ‛ஆரம்பிச்சு... ஆரம்பிச்சு... நிக்காம போகுது...’ 75வது நாளில் விக்ரம்!
லோக்கி சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவாகி இன்றுடன் 75 நாட்கள் நிறைவடைந்தது!
இன்றுடன் விக்ரம் படம் வெளியாகி 75 நாட்களாகியுள்ளது. இதைக்கொண்டாடும் வகையில் சோனி ம்யூசிக் விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 2022 ஜூன் 3 ஆம் தேதியில் இப்படம் வெளியானது.
View this post on Instagram
மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் என பொல்லாத சம்பவம் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலை வைத்து படம் இயக்குவுள்ளார் என்ற செய்தி வந்த பிறகு ரசிகர்களிடையே பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
படத்திற்காக பல ப்ரோமோஷன்கள் நடைப்பெற்றது, இன்னும் சொல்ல போனால் படத்தை விட லோகேஷ் கனகராஜின் பேட்டிக்கு பல ரசிகர்கள் உருவாகினர். மணிக்கணக்காக பேசினாலும் ஒரு நிமிடம் கூட சலிக்காமல் பேசியிருப்பார் லோக்கி. சில ரசிகர்கள் விக்ரம் படத்தின் மேக்கிங் காட்சிகளை வைத்து 5 மணி நேர படம் எடுத்தாலும் பார்போம் என்று கூறினர்.
இப்படத்தின் மூலம் சினிமாட்டிக் யுனிவர்ஸ்என்ற புது விஷ்யத்தை தமிழ் சினிமாவிற்கு லோகேஷ் அறிமுகம் செய்திருந்தார்.நடிகர் கார்த்தியின் கைதி படத்தில் நடித்த கதாப்பாத்திரங்களை இதில் உள்புகுத்தியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இப்படத்தில் நடிக்கவில்லையென்றாலும் அவரின் குறல் ஒலித்தவுடன் புல் அரித்துவிட்டது. அதுபோக கண்களால் நடித்து மயக்கும் ஃபஹத் ஃபாசில், லோக்கலான நடிப்பில் அசத்தும் விஜய் சேதுபதி படத்தின் ஹைலைட்ஸ். ஏஜண்ட் டீனாவின் ஸ்ட்ண்ட் காட்சி பிரமாதமாக அமைந்தது.
நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு முன் 24 படத்தில் ஆத்திரேயா எனும் கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்க புதியதாக ட்ரை செய்திருப்பார் சூர்யா. முதல் ஷோவில் படம் பார்தவர்கள் சூர்யா அப்படி, சூர்யா இப்படி என்று பயங்கர பில்ட்-அப் கொடுத்தனர். சூர்யா நடிப்பு சூப்பர்தான் ஆனால் மக்கள்தான் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துவிட்டனர் என்று சொல்லலாம்.
ஆனால் சூர்யா சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் லோகேஷ் கூறினார். பல மக்கள், இந்த தகவலை சஸ்பென்ஸாக வைத்திருக்கலாம் , லோகேஷ் ஒரு ஸ்பாய்லர் என்று புலம்பினர்.
அனைத்தையும் தாண்டி இது ஒரு பக்காவான லோக்கி படம் என்றுதான் சொல்ல வேண்டும்!!