மேலும் அறிய

Kamal Haasan About Rajinikanth: சிவாஜியின் இந்த ஸ்டைல் தான் ரஜினிகாந்தின் சினிமா கரியர்.. கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்!

Kamal Haasan - Rajinikanth: “சிவாஜி அந்தப் பாடலில் நடக்கும் பாணியை தன் வாழ்க்கையில் ஸ்டைலாகவே ரஜினி சார் மாற்றிக்கொண்டார்” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் "இந்தியன் 2" திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கமல்ஹாசன் - ஷங்கர் உள்ளிட்ட படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

ஜூலை 12 வெளியாகும் இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன்  - இயக்குநர் ஷங்கர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் கமல்ஹாசன் பேசும் விஷயங்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இருவரையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது இணையத்தில் கவனமீர்த்துள்ளது.

‘ரஜினி பின்பற்றும் சிவாஜி ஸ்டைல்’

“சினிமாவில் என்னை தத்தெடுத்துக் கொண்ட தகப்பன்கள் நிறைய பேர் இருக்காங்க. சிவாஜி கணேசனை ஒருமுறை பேட்டி எடுக்கும்போது நான் கேட்டுள்ளேன். பல நடிகர்களின் திரைப் பயணத்துக்கு சிவாஜி கணேசனின் ஒரு எக்ஸ்பிரஷன் காரணமாக இருந்துள்ளது. நான் ரஜினிகாந்தின் அனுமதியோடு சொல்கிறேன். உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்ற ‘யாரடி நீ மோகினி’ எனும் ஒரு பாடல் ரஜினியின் கரியராக மாறிவிட்டது. அதை ரஜினி சாரும் ஒத்துக் கொள்வார்.

சிவாஜி அந்தப் பாடலில் நடக்கும் பாணியை தன் வாழ்க்கையில் ஸ்டைலாகவே ரஜினி சார் மாற்றிக்கொண்டார். சிங்கம் என்றால் சிவாஜி என நினைத்துக் கொண்டிருந்த பிள்ளைகளில் ரஜினிகாந்தும் ஒருவர். சிவாஜி கணேசனிடம் இந்தப் பாட்டு பற்றி கேட்டபோது டான்ஸ் மாஸ்டர் ஹீரா லால் தான் இதனை செய்தார் எனப் பேசினார். தன்னுடைய பெருமையை பகிர்ந்து கொள்பவன் தான் நல்ல கலைஞன் என்கிற பாடத்தை அவரிடம் கற்றேன்” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

 

இந்தியன் 2 படக்குழு சென்னையில் தங்கள் ப்ரொமோஷன் பணிகளை முடித்துக் கொண்டு தற்போது ஹைதராபாத்துக்கு அடுத்தக்கட்ட ப்ரொமோஷனுக்காக சென்றுள்ளனர். கமல்ஹாசன், சித்தார்த், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விமானத்தில் சென்றுள்ள் இந்தப் புகைப்படங்கள், வீடியோக்களை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget