Kamal H Vinoth Movie: முழுக்க அரசியல்... அஜித் இயக்குனரின் அடுத்த படம்... இந்த முறை உலக நாயகனுடன்!
விக்ரம் படத்தின் விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது. இதனால் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தப்படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் புதிய படம் குறித்து வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா, அரசியல் என இரு தளத்திலும் பிசியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Buzz : #KamalHaasan - #HVinoth to join hands for a Political backdrop subject..🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) August 1, 2022
This is Massive..🌟
© @SenthilraajaR pic.twitter.com/ZdxeI6FkLc
வசூலிலும் மாபெரும் சாதனைப் படைத்த விக்ரம் படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் விக்ரம் படத்தின் விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது. இதனால் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தப்படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் கமல் முழுவீச்சில் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மதுரை கதைக்களத்தில் கமலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளேன் என பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் அதிரடியாக அறிவித்தார். இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
#KamalHaasan Mirattal LineUp 🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 1, 2022
- #Shankar (#Indian2)
- #MaheshNarayanan (Malik Fame)
- #HVinoth (Political Subject)
- #PaRanjith (Madurai Based)
- #LokeshKanagaraj (#Vikram3)
Mostly All Projects Under #RKFI
Nayagan Meendum Varaar💥 pic.twitter.com/4LqWe9lQv0
அவர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்குநர் ஹெச்.வினோத் கமலுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக கொண்டும் இப்படமானது உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்