Kamal Next Film With Pa.Ranjith: மாஸ் கூட்டணி.. கமலுடன் கைகோக்கும் பா.ரஞ்சித்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
Kamal Haasan joins Hand with Pa Ranjith: கமல்ஹாசன் நடிக்கும் அடுத்தப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவிற்கு அட்டக்கத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் சார்ப்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பா. ரஞ்சித் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Big breaking: @ikamalhaasan to do a film with @beemji. To begin after completing #Vikram with @Dir_Lokesh and #MaheshNarayanan's film. After Ranjith, KH will team up with @VetriMaaran. pic.twitter.com/i6DZ99g2Ix
— Rajasekar (@sekartweets) November 9, 2021
கமல்ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை முன்பே வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு மற்றொரு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டம் தற்போது யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இதற்கு அடுத்த படியாக மலையாளத்தில் மாலிக் படத்தை இயக்கி இருந்த மகேஷ் நாரயணன் இயக்கும் படத்தை முடித்த பின்னர் பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
10M+ Views in less than 24 HOURS for the First Glance into the world of VIKRAM 🔥
— Raaj Kamal Films International (@RKFI) November 7, 2021
➡️https://t.co/4neCP4KN4s@ikamalhaasan @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial @RKFI @turmericmediaTM @SonyMusicSouth #VikramFirstGlance #HBDKamalHaasan #KamalHaasan #Vikram_April2022 pic.twitter.com/xp0EYFLNeo
இதனிடையே இவரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் மொத்தமாக 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கிய கமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டார். இதன் காரணமாக சிறிது காலம் சினிமா வாழ்கையை தள்ளிவைத்து விட்டு முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தினார். ஆனால் தேர்தல் முடிவில் மக்கள் நீதிமையம் தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.