Kamal Haasan: 23 ஆண்டுகளுக்கு முன் கமல்-மணிரத்னம் போட்ட திட்டம்... இன்று நிறைவேறும் PS1!
23 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் 'பொன்னியின் செல்வன்'(Ponniyin Selvan) திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் கமல்ஹாசன்(Kamal Haasan) - மணிரத்னம் -பி சி ஸ்ரீராம் கூட்டணி
Kamal Haasan Dream about Ponniyin Selvan : 2 கோடி பட்ஜெட்... 2 பாகங்கள்...23 வருஷ திட்டம் பொன்னியின் செல்வன்
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படம். அவர் கண்ட அந்த கனவு இன்று நிஜமானது. ஆனால் இந்த கனவை திரையிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை திட்டமிட்டது மூவரின் கூட்டணி. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட பிளான் இன்று முழு உருவெடுத்து திரையிட தயாராகவுள்ளது. அந்த மூவர் மணிரத்னம் - கமல்ஹாசன்- ஸ்ரீராம் ஆகியோர் தான். அவர்களின் இந்த முயற்சி குறித்து 1989ம் ஆண்டே பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
சரித்திர கதை மீது ஆர்வம்:
கல்கி பத்திரிகைக்காக அன்று கமல் ஒரு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் சரித்திர கதைகள் மீது அவருக்கு இருந்த பிரமிப்பை பற்றியும் அதை படமாக்க நினைத்த அவரின் யோசனையையும் பற்றி கூறியிருந்தார். அன்றே நடிகர் கமல்ஹாசன் சரித்திர படம் ஒன்றை எடுப்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் மற்றும் கேமராமேன் ஸ்ரீராம் ஆகியோருடன் பேசியுள்ளார். அப்போது இயக்குனர் மணிரத்னம் கொடுத்த ஐடியா தான் "பொன்னியின் செல்வன்" காவியத்தை திரைப்படமாக்கும் முயற்சி.
23 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட திட்டம்:
கல்கி பத்திரிகையில் இடம் பெற்ற "கமலின் கனவுகள்" என்ற அந்த கட்டுரை தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த காவியத்தை படமாக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதை உருவாக்க எண்ணியுள்ளார்கள். இப்படத்தை இயக்க சரியான நபர் இயக்குனர் மணிரத்னம் என முடிவு செய்துள்ளார் கமல். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். படத்திற்கு இசையமைக்க இருந்தார் இளையராஜா மற்றும் ஒளிப்பதிவு பணிகளை பி.சி. ஸ்ரீராம் செய்ய இருந்தனர். படத்தின் கதாநாயகிகளுக்காக புதுமுகங்களை தேர்வு செய்ய இருந்துள்ளார்கள். இப்படத்தினை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருந்தனர். அன்றய திட்டம், முயற்சி அனைத்தும் இன்று நிறைவேறியுள்ளது.
#PonniyinSelvan - When @ikamalhaasan wanted to produce (2cr budget in 1989 - 23 years back) and act in the epic directed by #ManiRatnam. DOP @pcsreeram , music @ilaiyaraaja . #Prabhu and #Sathyaraj agreed to play pivotal characters. They even wanted to make it a 2-part film 1/2 pic.twitter.com/2EUJURC8cI
— Rajasekar (@sekartweets) September 5, 2022
கமலின் கனவு, ஆசை, லட்சியம் நிறைவேறியது :
எனவே நடிகர் கமல், ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்பதே. அது இன்று லைக்கா நிறுவனம் மூலம் நிஜமாவது கமலுக்கு மட்டும் பேரானந்தம் அல்ல நம் அனைவருக்கும் தான். இப்படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாக வெளியாக படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆர்வம் பலமடங்காக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. செப்டம்பர் 30 தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு பொன்னாளாக இருக்கும்.