மேலும் அறிய

Indian 2: இந்தியன் 2 படத்தின் நீளம் குறைப்பு.. 20 நிமிடக் காட்சிகள் நீக்கம்? காரணம் இதுதானா?

இந்தியன் 2 படத்தின் நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், படத்தின் நீளம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியன் 2

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகியது. ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, பியூஷ் மிஸ்ரா மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், மற்றும் டெமி-லீ டெபோ உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார் . 

இந்தியன் 2 படத்தின் நீளம் குறைப்பு

இந்தியன் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகத்தில் மேல் பெரும் எதிர்பார்த்து இருந்து வந்தது. ஷங்கர் மற்றும் கமலின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் கதை சுவாரஸ்யாமானதாக இருப்பதாகவும் கமல், சித்தார்த் மற்றும் பிற நடிகர்களின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் படத்தின் நீளம் அதிகம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு தொய்வு  ஏற்படுத்துவதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், படத்தின் நீளம் குறித்து தொடர்ச்சியான கருத்துக்கள் அதிகரித்து வந்ததால் இந்தியன் 2 படத்தின் நீளம் குறைக்கப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. படம் வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு நீளத்தை குறைப்பது குறித்த விவாதம் சமூக வலைதளத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

2 நாள் வசூல் நிலவரம்

இந்தியன் 2 திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்தியன் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 25.6 கோடிகள், இரண்டாவது நாளில் 16.7 கோடிகள் என மொத்தம் 42.3 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : Aadujeevitham: ஓடிடியில் வெளியாகும் ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப் படம்.. ரிலீஸ் தேதி, தளம் இதுதான்!

Sarathkumar - Rayane: சரத்குமாரை ஏன் அப்பா எனக் கூப்பிடுகிறீர்கள் என்ற நெட்டிசன்.. சுளீர் பதில் தந்த ராதிகா மகள் ரேயான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget