Kalki 2898 AD: பிரபாஸை முந்திக்கொண்டு தீபிகாவின் கையை பிடித்த அமிதாப் பச்சன்...வைரலாகும் வீடியோ
Kalki 2898 AD Pre release Event: கர்ப்பமாக இருக்கும் தீபிகா படூகோன் மேடைக்கு வர, அவரை வரவேற்க பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கல்கி 2898 AD (Kalki 2898 AD)
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ரானா டகுபதி , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னட உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படூகோன் , நடிகர் பிரபாஸ் , கமல்ஹாசன் , ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
தீபிகாவின் கைபிடித்த அமிதாப் பச்சன்
நடிகை தீபிகா படூகோன் தற்போது தனது முதல் குழந்தையை சுமந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது கணவர் ரன்வீர் சிங் உடன் தெரிவித்தார் தீபிகா. செப்டம்பர் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் வயிற்றில் குழந்தையுடன் கல்கி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
oh the reunion we waited for, #kalki2898ad ✨🖤#deepikapadukone #amitabhbachchan pic.twitter.com/cCFIXDeun5
— justlikethat (@justlikethatM) June 19, 2024
இந்த நிகழ்வில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தீபிகா படுகோன் மேடை ஏற முயற்சிக்கையில் பிரபாஸ் அவரது கையைப் பிடித்து அவருக்கு உதவுகிறார். உடனே அமிதாப் பச்சன் ஓடி வந்து பிரபாஸை தள்ளிவிட்டு தீபிகாவுக்கு உதவி செய்கிறார்.
அதேபோல் மேடையில் இருந்து தீபிகா இறங்கும்போது அமிதாப் முந்திக்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமிதாப் மற்றும் பிரபாஸ் இடையிலான இப்படியான சின்ன சின்ன விளையாட்டுக்கள் இந்த நிகழ்ச்சி முழுவதும் நிறைந்திருந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்தது.
மேலும் படிக்க : HBD RJ Balaji: இந்த சிரிப்பு மனிதன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா? ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாள் இன்று