Siragadikka Aasai Serial Today June 20 : விஜயா சுளுக்குக்கு யார் காரணம்? ரணகளமாகும் சிறக்கடிக்க ஆசை! இன்று என்ன ஆகும்?
Siragadikka Aasai Serial Today: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது.
Siragadikka Aasai Today Episode: 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 20) எபிசோடில்
விஜயா: எனக்கு சுளுக்கு பிடிக்க நீ தான் காரணம். அதுக்காக தான் வேண்டுமென்றே டான்ஸ் கத்துக்க வரேன் என எனக்கு சுளுக்கு பிடிக்க வச்ச" என என மீனாவை திட்டுகிறாள் .
முத்து: "ஈ காக்கா கூட வரலேயே என்றதால தான் நாங்க வந்தோம். மீனா தான் உங்களுக்கு முதல் குரு தட்சணை கொடுத்தாள். உனக்கு தேவை தான் மீனா" என சொல்கிறான்.
கிச்சனுக்கு சென்ற முத்து மீனாவிடம் "நீ இருந்தாலும் கொஞ்சமா ஆடி இருக்கலாம். நாம் போய் கிளாஸ்ல சேரலாம் என ஐடியா கொடுத்தது நான் தான் ஆனா ஓவரா ஆடி அவங்களுக்கு கழுத்து சுளுக்க வைக்க நீ தான் காரணம்" என்கிறார்.
மீனா (கோபத்தில்): "ஆமா என்னால தான் உங்க அம்மாவுக்கு சுளுக்கு பிடிச்சுகிச்சு. நீங்களும் உங்க அம்மா பக்கம் பேசுறீங்க இல்ல"
விஜயாவை படியில் படுத்துக்க சொல்லி மீனா படியை கொண்டு வந்து கொடுக்கிறாள். அண்ணாமலை விஜயாவை தரையில் படுத்து கொள்ள சொல்கிறார்.
அண்ணாமலை: "மீனா உனக்கு உதவியா இங்கேயே படுத்துப்பா. நான் முத்துவோட படுத்துக்குறேன்" என சொல்கிறார். விஜயா படியில் படுப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக வந்து என்ஜாய் செய்கிறாள் ஸ்ருதி. அது விஜயாவுக்கு கோபமாக வருகிறது.
மனோஜ் ரோகிணியிடம் "நீ எதுக்கு அம்மாவுக்கு இந்த டான்ஸ் கிளாஸ் ஐடியா எல்லாம் குடுத்த. பாரு இப்போ அவங்க கழுத்தை திருப்ப முடியாம கஷ்டப்படுறாங்க"
ரோகினி:"அப்போ என்னால தான் உங்க அம்மாவுக்கு இப்படி ஆச்சா. அவங்க பார்லருக்கு வரேன், ஷோரூம்ல வந்து உட்கார்ந்துக்குறேன்னு சொன்னாங்க. அதை சமாளிக்க தான் அப்படி சொன்னேன். கழுத்து சுளுக்குக்கு அந்த மீனாவும் முத்துவும் தான் காரணம்" என கோபமாக சண்டை போடுகிறாள்.
மீனா விஜயா பக்கத்தில் படுக்க போக அவளை திட்டி அந்தப்பக்கமா படுக்க சொல்கிறாள். போய் ரோகிணியை வர சொல்லி சொல்ல சொல்கிறாள் விஜயா.
ரோகிணி வந்ததும் விஜயா: "இந்த மீனாவோட எல்லாம் என்னால தூங்க முடியாது. நீ வந்து என் கூட படுத்துக்கோமா" என்கிறாள்.
ரோகிணியும் வந்து விஜயாவுடன் படுத்து கொள்கிறாள். மனோஜ் கெஞ்சி பார்த்தும் விஜயா ஒத்துக்கொள்ளவில்லை.
அடுத்த நாள் வித்யா ரோகிணி கடையில் மாட்ட சுவாமி படம் ஒன்று கேட்டதால் அதை வாங்கி வந்து கொடுக்கிறாள். அதற்கு தினமும் பூ போட வேண்டும் என சொல்ல ரோகிணி மீனாவுக்கு போன் செய்து தினமும் ஷோரூமுக்கு பூ கொண்டு வந்து கொடுக்க சொல்கிறாள். மீனா வண்டியை எடுத்து கொண்டு கிளம்ப எதிரில் மலேசியா மாமா வருவதை பார்த்துவிடுகிறாள். அவரும் மீனாவை பார்த்ததும் வேகவேகமாக ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு எஸ்கேப்பாக மீனா அவரை பின்தொடர்ந்து செல்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.