Jyothika: பிரிச்சு பார்க்காதீங்க ப்ளீஸ்... ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா கோரிக்கை
Jyothika :இந்திய படங்கள் அனைத்தையும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் மக்கள் ரசிக்க வேண்டும் என நடிகை ஜோதிகா கோரிக்கை.
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அவர் கொடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் தான் ரசிகர்களின் ஃபேவரட். ஆறே ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய ஜோதிகா திருமணத்துக்கு பிறகு ஒரு பிரேக் எடுத்து கொண்டார். பிறகு மீண்டும் '36 வயதினிலே' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஷைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படம் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
வுமன் சென்ரிக் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் பல வேரியேஷன் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் உடன் நடித்த 'ஷைத்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடித்த ஸ்ரீகாந்த் படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தாலும் இந்தி ரசிகர்கள் ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். அது குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் போது மக்கள் இந்த அளவுக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பாலிவுட்டில் நடிக்க நல்ல கதைக்காக காத்திருந்தேன். அது எனக்கு இப்போது அமைந்தது.
மொழி ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ், இந்தி, மலையாளம் என எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கதையாக இருந்தால் நான் நடிப்பேன். தென்னிந்திய ரசிகர்களையும் வட இந்திய ரசிகர்களையும் பிரித்து பார்ப்பது கூடாது. தென்னிந்திய ரசிகர்கள் பெரும்பாலும் இந்தி படங்களை பார்க்க மாட்டார்கள். ஆனால் வட இந்திய ரசிகர்கள் தென்னிந்திய படங்களை விரும்பி பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக ரஜினி சார் சார்ந்த போஸ்ட் எல்லாம் வட இந்தியில் மிகவும் ட்ரெண்டிங்காக இருக்கும்.
இந்திய சினிமாவை இப்படி பிரித்து பார்ப்பது மனதுக்கு சற்று வருத்தமாக இருக்கிறது. படங்களை தென்னிந்திய படங்கள், வட இந்திய படங்கள் என பிரித்து பார்த்து ரசிக்காமல் இந்திய படமாக பார்த்து ரசிக்க வேண்டும்” என்றார். குழந்தைகளின் படிப்புக்காக தான் மும்பையில் செட்டிலாகி இருப்பதாகவும் அவர்களுக்கு சினிமா மீது தற்போது ஆர்வம் இல்லை என்றும் அவர்களின் மொத்த கவனமும் படிப்பின் மீது மட்டுமே உள்ளது என்றும் பேசி இருந்தார்.