Jyothika Mammootty Combo: மம்முட்டியுடன் கை கோர்க்கும் ஜோ...! படத்தின் பெயர் இதுதான்...!
நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பில் இவர்கள் இணைந்து நடிக்கும் படத்திற்கு காதல் - தி கோர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட இயக்குநர் ஜியோ பேபி இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் மம்முட்டியுடன் முதன்முறையாக கைகோர்கிறார் ஜோதிகா.
After a long gap , #Jyotika is acting in a film titled #Kaathal directed by Joe Baby (Great Indian Kitchen fame). @mammukka plays the male lead pic.twitter.com/EKrXAFi9EK
— Rajasekar (@sekartweets) October 18, 2022
முகத்தில் இத்தனை ரீயாக்ஷன் ஒரே சமயத்தில் காட்ட முடியுமா எனும் அளவிற்கு ரீயாக்ஷன் குவீன் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக ஏராளமான ரசிகர்களை ஜிவ்வென இழுத்தவர் நடிகை ஜோதிகா. இந்த தமிழ்நாட்டு மருமகள் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்த ஜோ சமீப காலமாக தனது காதல் கணவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எனும் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். இவர்களின் முதல் தயாரிப்பான "36 வயதினிலே" திரைப்படமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து தயாரிப்பது தான் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். நடிகர் சூர்யா நடிப்பில், 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 2020ம் ஆண்டு வெளியான "சூரரை போற்று" திரைப்படம் பல பிரிவுகளில் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை ஜோதிகா அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். பெற்றோர் சம்மதத்துடன் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு முழுமையான தமிழ்நாட்டு பெண்ணாக மாறிய ஜோதிகா தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில், வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களை தெரிந்தது நடித்து வருகிறார். இன்றும் அவரின் நடிப்பாலும், அழகாலும் ஏராளமான ரசிகர்களை தக்க வைத்துள்ளார். கணவருக்கு பக்கபலமாக இருந்து வரும் ஜோதிகா 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திலும் தனது ஈடுபாட்டை முழுமையாக கொடுத்து வருகிறார்.