Junior NTR: ‛ஹாலிவுட் போறேன்ணா’ ஜூனியர் என்.டி.ஆர்., யின் அடுத்த மூவ்!
ஜூனியர் என்.டி.ஆருக்கு அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்.. ஹாலிவுட்டை கலக்கவிருக்கும் தெலுங்கு ஸ்டார்.
பான் இந்திய நடிகர்களை சினி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ பிரபலபடுத்தினார். ஜுனியர் என்.டி.ஆர் அதுவரை தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். அவருக்கும் தெலுங்கு சினிமா பார்க்கும் மக்களில் பெரும் ரசிகர்கள் இருந்து வந்தனர்.
ஆர்ஆர்ஆர் படத்தில் கொமாராம் பீம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி தனக்கு கொடுத்த வாய்பினை பயன்படுத்தி கொண்டார். இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பயங்கர வசூல் செய்த பின் நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பானது. பாகுபலி அளவுக்கு படம் அமையவில்லை என்றாலும், இப்படத்திற்கு அப்படிப்பட்ட பேரும் புகழும் இப்படத்திற்கு கிடைத்தது.
Officially Confirmed! #JrNTR offered Hollywood Netflix Action Thriller ! #NTR liked the Script very much !!! Welcome to Hollywood #NTR ! Only Tollywood Actor who got this offer ! 🕺🏻🔥🔥🔥
— Umair Sandhu (@UmairSandu) August 15, 2022
சர்வதேச சினிமா இயக்குநர்களும் திரை விமர்சனம் செய்தவர்களும் இப்படத்தை பாராட்டினர். ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலுக்கு பின், அவரின் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சர்வதேச தனிக்கை குழுவில் பணிபுரியும் உமைர் சந்து என்பவர், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் உமைர் சந்து அவர்கள், “ ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. என்.டி.ஆருக்கு இப்படத்தின் கதை பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிவாவிற்கு ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
இப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆக்ஷன் திரில்லர் படமாகும். முன்னதாக பிரசாந்த் நீல் இவரை வைத்து படம் எடுக்கவுள்ளதாக கூறியிருந்தார். NTR31 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்றஅறிவிப்பும் வந்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இவருடன் நடித்த ஆலியா பட், ஹார்ட் ஆஃப் தி ஸ்டோன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவரது முதல் ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடதக்கது.