Anticipated Hollywood Films: "ஜோக்கர் டூ டெட் பூல்" 2024ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள்!
Anticipated Hollywood Films: இந்திய ரசிகர்களால் 2024ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Anticipated Hollywood Films: இந்திய ரசிகர்களால் 2024ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹாலிவுட் திரைப்படங்கள்:
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகி வருகின்றன. அதேநேரம் பெரும் பொருட்செலவில், அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகளால் பிரமாண்ட காட்சிகளுடன், கற்பனைக்கு எட்டாத கதைக்களத்துடன் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு என இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
இதன் காரணமாக தான் அந்நாடுகளின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சில முக்கிய ஹாலிவுட் படங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டியூன் - இரண்டாம் பாகம்:
டியூன் படத்தின் முதல் பாகம் அதன் நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகளால், உலகளாவிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாக ருந்த நிலையில், திரைப்பட ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தாமதமானது. இதன் காரணமாக, டியூன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
Denis Villeneuve இன் காவிய அறிவியல் புனைவுக்கதையின் தொடர்ச்சியில், பால் அட்ரீடஸ் தனது குடும்பத்தை அழித்த அனைவரையும் பழிவாங்கவும், அவர் மட்டுமே கணிக்கக்கூடிய பயங்கரமான எதிர்காலத்தைத் தடுக்கவும் முற்பட உள்ளார்.
மேடம் வெப்:
மேடம் வெப் திரைப்படம் சோனியின் ஸ்பைடர் மேன் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். டகோட்டா ஜான்சன், கசாண்ட்ரா 'காசி' வெப்/மேடம் வெப் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எதிர்காலத்தை கணிக்கும் சக்தி வாய்ந்த மேடம் வெப், வில்லனிடமிருந்து சில பெண்களை காப்பாற்றும் முயற்சியை மையப்படுத்தி இப்படம் வெளியாகிறது. இப்படம் பிப்ரவரி மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜோக்கர் - இரண்டாம் பாகம்:
கடந்த 2019ம் ஆண்டு ஆர்-ரேட்டிங்கில் வெளியாகி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக்குவித்து ஜோக்கர் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம், அக்டோபர் 2024ல் வெளியாக உள்ளது. வாகன் பீனிக்ஸ் ஜோக்கராக நடிக்க, பிரபல பாடகரான லேடி காகா ஹார்லீ குயின் ஆக நடிக்கிறார்.
ஃபியூரியோசா:
ஜார்ஜ் மில்லரின் முந்தைய மேட் மேக்ஸ் படங்களின் அடுத்த பாகமாக ஃபியூரியோசா உருவாகி உள்ளது. மே மாதம் 23ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில், தோர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெட்பூல் -3:
ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள டெட்பூல் திரைப்படத்தின் மூன்றாம் பாகம், நடப்பாண்டில் வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. ஹுக் ஜாக்மேன் மீண்டும் தனது வுல்வரின் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்வெலின் எம்சியு திரையுலகின் அங்கமான இப்படம் வரும் ஜுலை 26ம் தேதி வெளியாக உள்ளது.
சோனிக் ஹெட்ஜ்ஹாக் 3:
சேகா வீடியோ கேமை மையமாக கொண்டு வெளியான சோனிக் ஹெட்ஜ்ஹாக்கின் முதல் இரண்டு பாகங்களுமே இந்தியாவிலும் வசூல் ரீதியாக அசத்தியுள்ளன. இதனை தொடர்ந்து அப்படத்த்ன் மூன்றாம் பாகம் நடப்பாண்டில் வெளியாக உள்ளது.
வெனம் - 3:
வெனம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான லெட் தேர் பி கார்னேஜ் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் டாம் ஹார்டி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூன்றாவது பாகம் நவம்பர் 8ம் தேதி வெளியாகியுள்ளது.