John Kokken Pooja Ramachandran: குட்டிப்பையன் வந்துட்டான்... வேம்புலி நடிகர் ஜான் கொக்கன் - பூஜா தம்பதிக்கு ஜூனியர் வந்தாச்சு..
சில வாரங்களுக்கு முன் 9 மாதங்கள் பூஜாவுக்கு முடிந்ததாகவும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் பூஜா - ஜான் கொக்கன் இருவரும் இன்ஸ்டாவில் பகிர்ந்தனர்.
![John Kokken Pooja Ramachandran: குட்டிப்பையன் வந்துட்டான்... வேம்புலி நடிகர் ஜான் கொக்கன் - பூஜா தம்பதிக்கு ஜூனியர் வந்தாச்சு.. john kokken Pooja Ramachandran become parents to a baby boy details John Kokken Pooja Ramachandran: குட்டிப்பையன் வந்துட்டான்... வேம்புலி நடிகர் ஜான் கொக்கன் - பூஜா தம்பதிக்கு ஜூனியர் வந்தாச்சு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/5b63b32fb6994a88b56dd1eb3a8b2c941682777516944574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ஜான் கொக்கென் - பூஜா ராமச்சந்திரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்கள் குழந்தையின் பெயரையும் ஜான் கொக்கன் தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆண் குழந்தை
பாகுபலி தொடங்கி, சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்து கவனமீர்த்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கன். இவரது மனைவி பிரபல நடிகை, விஜே என வலம் வந்து ரசிகர்களை ஈர்த்த பூஜா ராமச்சந்திரன். இவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனியார் மியூசிக் சேனலான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் மூலம் 2000களில் பெரும் புகழ் பெற்ற பூஜா, சக விஜே க்ரெய்க்கை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் 2017ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதேபோல் ஜான் கொக்கனும் பிரபல நடிகை மீரா வாசுதேவனைத் திருமணம் செய்து 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்திருந்தார்.
ஜான் கொக்கன் - பூஜா தம்பதி
இச்சூழலில் 2019ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கனும் பூஜாவும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடி இணையத்தில் தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவிட்டு ஹிட் ஜோடியாக வலம் வருகிறது.
இறுதியாக 2021ஆம் ஆண்டு வெளியான ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஜான் கொக்கன் கவனமீர்த்தார். தொடர்ந்து, இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியான துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து ஜான் கொக்கன் லைக்ஸ் அள்ளினார்.
இந்நிலையில் முன்னதாக பூஜா கருவுற்றிருக்கும் தகவலை ஜான் கொக்கன் - பூஜா தம்பதி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். மேலும் பூஜாவின் வளைகாப்பு புகைப்படங்களும் இணையத்தில் லைக்ஸ் அள்ளிய நிலையில், கர்ப்பகால கப்பிள் ஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகின.
’எங்கள் மகன் வந்துவிட்டான்’
மேலும் சில வாரங்களுக்கு முன் 9 மாதங்கள் பூஜாவுக்கு முடிந்ததாகவும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் பூஜா - ஜான் கொக்கன் இருவரும் இன்ஸ்டாவில் பகிர்ந்தனர்.
இந்நிலையில், இத்தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ”எங்கள் இதயங்களையும் வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்ப குட்டிப்பையன் வந்துவிட்டான், கியான் கொக்கனை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனைகள், அன்புக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகைகள் ராய் லட்சுமி, கனிகா, நடிகர்கள் டான்சிங் ரோஸ் ஷபீர், ஹரீஷ் உத்தமன் ஆகியோர் இன்ஸ்டாவில் ஜான் கொக்கன் - பூஜா தம்பதிக்கு வாழ்த்துகளைப் பதிந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)