Kadhalikka neramillai Review : காதலிக்க நேரமில்லை முதல் பாகம் விமர்சனம்...ரசிகர்கள் சொல்வது என்ன ?
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மோகன் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் சோசியல் மீடியா விமர்சனத்தைப் பார்க்கலாம்
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. யோகி பாபு · லால் · வினய் ராய் · டி.ஜே. பானு · ஜான் கொக்கன் · வினோதினி வைத்திநாதன் · லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு வெளியான மற்ற படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் ரசிகர்களின் இறுதி நம்பிக்கையாக இப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
காதலிக்க நேரமில்லை விமர்சனம்
"வழக்கமான ரொமாண்டிக் காமெடி படங்களைப் போல் இல்லாமல் இன்றைய தலைமுறையின் தீவிரமான சில பிரச்சனைகளை இப்படம் கையாள்கிறது. முதல் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் ஓரளவிற்கு நம்மை எங்கேஜ் செய்கிறது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் என்னை இழுக்குதடி பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக " படம் பற்றி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
#KadhalikkaNeramillai First Half - Fairly engaging so far packed with few interesting elements ♥️
— AmuthaBharathi (@CinemaWithAB) January 14, 2025
- Not a Feel good Rom-Com, but the movie handles about the modern age Love drama & issues of Current Generation 🤝
- ARRahman's songs & BGM are so beautiful 🎶
- Ravi & NithyaMenen… pic.twitter.com/HtXIA4nMcJ
அதிகம் பேசப்படாத ஒரு கதைக்களத்தை இப்படம் கையாள்வதாகவும் ஆனால் சொதப்பலான திரைக்கதை படத்தை சுமாரான ஒரு அனுபவமாக மாற்றுவதாக மற்றொரு தளம் குறிப்பிட்டுள்ளது.
#KadhalikkaNeramillai Untold story that deserves praises, but unfortunately fails to keep us engrossed with weak screenwriting & characters. 1st half goes directionless. 2nd half is somewhat ok due to little boy. 90min version wud ve been at least bearable. Lack of Emotions pic.twitter.com/zCXvtstSOE
— Star Talkies (@startalkies_ofl) January 14, 2025