ஓடிடியில் வெளியானது காதலிக்க நேரமில்லை..எங்கு பார்க்கலாம் ?
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமிக்கை திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது

காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. யோகி பாபு · லால் · வினய் ராய் · டி.ஜே. பானு · ஜான் கொக்கன் · வினோதினி வைத்திநாதன் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வணக்கம் சென்னை படத்தின் மூலமாக இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த கிருத்திகா உதயநிதி, காதல் மட்டுமில்லாமல் , குடும்பம் , குழந்தை வளர்ப்பு தொடர்பாக இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை காதலிக்க நேரமில்லை படத்தில் பேசியுள்ளார் கிருத்திகா உதயநிதி . ஜெயம் ரவி நடித்த அடுத்தடுத்த படங்கள் பெரியளவில் கவனம் பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. திரையரங்கில் வெற்றி நடைபோட்ட காதலிக்க நேரமில்லை படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காதலிக்க நேரமில்லை ஓடிடி ரிலீஸ்
இன்று பிப்ரவரி 11 ஆம் தேதி காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
Ungalukku pudichavangala izhu izhu izhu izhu izhuthuttu poi… Kadhalikka Neramillai paarunga 🤭❤️
— Netflix India South (@Netflix_INSouth) February 11, 2025
Watch Kadhalikka Neramillai, out now on Netflix in Tamil, Telugu, Malayalam and Hindi. Kannada coming soon!#KadhalikkaNeramillaiOnNetflix pic.twitter.com/WHKzAbz2Qh

