Jawan Twitter Review: பாலிவுட்டை பதம் பார்ப்பார்களா தமிழ் படைப்பாளர்கள்! வெளியானது அட்லீயின் 'ஜவான்’ - ட்விட்டர் விமர்சனம் இதோ!
நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் இன்று உலகமெங்கும் வெளியான நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் இன்று உலகமெங்கும் வெளியான நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
திரும்பும் பக்கமெல்லாம் ஜவான்
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். குறிப்பாக நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியதால் அதன் பலன் இந்தி சினிமாவுக்குள் அவர் அடியெடுத்து வைக்க காரணமாக அமைந்தது.
#JawanReview #Jawan: BLOCKBUSTER
— T O M (@AjithianSiva1) September 7, 2023
Rating: ⭐️⭐️⭐️⭐️
Star power, Style, Scale, Songs, Soul, substance & surprises ( Cameos ) & most importantly SRK who’s back again with a vengeance Mass 💥🔥 Will be the second Blockbuster of SRK in 2023. அட்லீ அண்ணா நீ ஜெயிச்சுட்ட 😍 @Atlee_dir
இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள அட்லீ முதல் படமாக ‘பாலிவுட் பாட்ஷா’ என கொண்டாடப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.
INTERVAL:
— yourweirdcrush (@Yourweirdcrush1) September 7, 2023
This is #ShahRukhKhan at his MASSIEST BEST! #Pathaan gave birth to #SRK as an ACTION STAR, and #Jawan makes his a SHINING STAR. It suffers through #Atlee's Kleptomaniac behaviour of stealing things & a few outdated segments, but MASS ELEVATION makes you forgive it.
ரெட் சில்லி நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜவான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது.
Absolutely loved the first half! The background music was fantastic and SRK's entry was mind-blowing. The action scenes had me glued to the screen. Atlee has done a great job. BoyaAtlee, indeed! Can't wait for the second half. Who else is excited for the rest of the movie? #Jawan
— RushLabs (@RushLab) September 7, 2023
ரசிகர்களின் விமர்சனம் என்ன?
முன்னதாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திரும்பும் இடமெல்லாம் ஜவான் படத்தின் போஸ்டர், பேனர்கள் என கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஜவான் படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று பல சாதனைகளைப் படைத்தது. ஏற்கனவே படத்தில் இரண்டு ட்ரெய்லர்கள், பாடல்கள் எல்லாம் வெளியாகி ஜவான் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படியான நிலையில் ஜவான் படம் இன்று தியேட்டரில் வெளியானது.
#jawan #interval Super hero level introduction scene 🤩, epic camera angles and dad SRK character is absolutely badass🔥🔥. Rest 1st half felt okayish, what I didn't like is just too many slowmo shots, just way too many. Got frustrated at a point. Let's see 2nd half, good so far!
— Hero (@Hero_of_star) September 7, 2023
தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி தொடங்கிய நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடிப்பில் மிரட்டியுள்ளதால் ரசிகர்கள் தெரிவித்துள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#Jawan #JawanFirstDayFirstShow
— Rajesh Kumar Pal (@saregamapal) September 7, 2023
FirstHalfReview!
Exceptional opening scenes.
Superb direction from #Atlee
New avatar of @iamsrk unlocked! @NayantharaU @VijaySethuOffl keep you on the edge.
Better than #Pathaan say fans!
Stay tuned on @ABPNews @abplive pic.twitter.com/XGGT1JyAt4
மேலும் படிக்க: Jawan Release LIVE: களைகட்டத் தொடங்கியது ஜவான் கொண்டாட்டம்... திரையரங்கை திருவிழாவாக்கும் ரசிகர்கள்..!