Jawan Trailer Copy: இத்தனை படத்தின் காப்பியா ‘ஜவான்’ ட்ரெய்லர்.. அட்லீயை வச்சு செய்யும் ரசிகர்கள்..!
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்த அட்லீ, இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், இன்றைய தினம் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொதுவாக அட்லீ படங்கள் வெளியாகும் போதெல்லாம் அது ஏதேனும் ஒரு படத்தின் காப்பி என்ற விமர்சனங்கள் எழும். மௌன ராகம் படம் ராஜா ராணியாகவும், சத்ரியன் படம் தெறியாகவும், அபூர்வ சகோதரர்கள் படம் மெர்சலாகவும், சக் தே இந்தியா படம் பிகில் படமாகவும் உருவானதாகவும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் உண்மையில் அட்லீ படம் ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷனில் இருப்பதாகவும், அவர் ரசிக்கும் படியான படங்களை தருவதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகின்றனர்.
#Memes #jawan pic.twitter.com/UJmfbNdNi6
— Cinema Bugz (@news_bugz) July 10, 2023
இப்படியான நிலையில் ஜவான் படமும் அதற்கு தப்பவில்லை. அந்த படம் தமிழில் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என விமர்சனம் எழுந்தது. ஆனால் எதற்குமே படக்குழுவினர் பதிலளிக்கவில்லை. விறுவிறுப்பாக ஷூட்டிங் சென்ற நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படமானது செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே ஜவான் பட ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் பல படங்களின் காப்பி என இணையத்தில் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றது. குறிப்பாக குழந்தையை கையில் ஏந்தி காட்டுகிற சீன் பாகுபலி படத்தில் இருந்தும், முகத்தில் மாஸ்க் போட்டி ஷாரூக் இருக்கும் காட்சி அந்நியன் படத்தில் இருந்தும், முகத்தில் துணி சுத்தியிருக்கும் சீன் டார்க் மேன் படத்தில் இருந்தும், மொட்டைத் தலையுடன் ஷாரூக் காட்சி சிவாஜி தி பாஸ் படத்திலும், பைக் சீன் காட்சிகள் வலிமை படத்தில் இருந்தும் காப்பி செய்யப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.