Vijay: முதலில் நெல்சன்.. இப்போ அட்லீ... ஊக்கப்படுத்திய விஜய்... நெகிழும் இயக்குநர்கள்!
இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு நடிகர் விஜய் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவருவது அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
ஜெயிலர் படம் தொடங்குவதற்கு காரணம் நடிகர் விஜய் என்று முன்னதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லீயும் அவரை பாராட்டியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்துள்ளது.
இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு நடிகர் விஜய் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவருவது அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் வரும் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. நயன்தாரா, விஜய்சேதுபதி என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ உள்ளிட்ட படக்குழுவினரும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் அட்லீ, ”இந்த சாய் ராம் கல்லூரியில் விழாவை நடத்துவதற்கு காரணம் இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் சார் தான். அவர் படித்த பள்ளி என்பதால் இங்கு விழாவை நடத்த திட்டமிட்டேன். இதற்கு ஓகே சொன்ன ஷாருக்கான் சாருக்கு நன்றி. இந்தப் படத்துக்காக நான் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது என் அண்ணன், என்னுடைய தளபதி தான். அவர் தந்த ஊக்கத்தில் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது“ என்று அவர் பேசினார்.
ஜெயிலர்
இதேபோல், பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது குறித்து முன்னதாக ஜெயிலர் ப்ரோமோஷன் பணிகளின்போது இயக்குநர் நெல்சன் பேசியிருந்தார். “விஜய் என்னிடம் “சரி விடு நம்ம ஒன்னு பண்ணியிருக்கோம். அது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காம போயிருக்கலாம். நீ என்கிட்ட சொன்ன கதைய எடுத்த, அது நல்லா இல்லனு சொன்னா, அடுத்த முறை நல்லா பண்ணலாம்” என்று சொன்னார்.
நான் அவரிடம் “படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் என் மேல் கோபமாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். அவர் பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். பின் எனக்கு ஃபோன் செய்து “அப்போ இந்த ஒரு படம்தான் உனக்கும் எனக்கும் இருக்க பழக்கமா. நீ இப்டி கேட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம ஒன்னு பண்ணோம். அது நல்லா இல்லனா வேற பண்ணிக்கலாம். அவ்ளோதான்” அப்டினு சொன்னார்” என நெல்சன் கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ என தொடர்ச்சியாக இளைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றும் விஜய் அவர்களின் திறமையை அங்கீகரித்தும் ஆதரவளித்தும் வருவது விஜய் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜூன், சஞ்சய் தத், த்ரிஷா, கெளதம் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.