மேலும் அறிய

Janakiraman Movie: 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‛ஜானகி ராமன்’... சுத்துப் போட்டு சிரிக்க வைத்த சுந்தர் சி!

Janakiraman Movie: 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜானகிராமன் திரைப்படம், இதே நாளில் 1997 அக்டோபர் 31 ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

90களில் வெளியான திரைப்படங்களில் பல படங்கள், மக்களை குலுங்க குலுங்க சிரித்து மகிழ்வித்த திரைப்படங்கள். அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி படங்கள், குடும்பம் குடும்பமாக படையெடுத்து பார்த்து மகிழ்ந்த திரைப்படங்கள் தான். ஒரு குடும்பத்தையே வைத்து ஒரு கலகலப்பான படத்தை எடுக்க திட்டமிட்டார் சுந்தர் சி. அப்படி உருவானது தான் ஜானகி ராமன். 

தீவிர அனுமன் பக்தரான ஆர்.சுந்தர்ராஜன், தன் அண்ணன் மகன்களான கவுண்டமணி மற்றும் சரத்குமாரை தீவிர அனுமன் பக்தர்களாக வளர்ப்பார். பெண் வாசம் இல்லாமல் சுத்தமான ஆன்மிகவாதியாக அவர்களை வளர்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை. ஆனால், கவுண்டமணி, சரத்குமார் இருவருக்குமே இல்லறத்தில் விருப்பம். அதிலும் சரத்குமார் ஒரு கட்டத்தில் நக்மாவை திருமணம் செய்து கொள்ள, திடீரென எண்ட்ரி ஆகும் ரம்பா, தானும் சரத்குமாரின் மனைவி தான் என கூறி, குடும்பத்தில் ஏகத்திற்கு பிரச்னை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சித்தப்பாவுக்கு தெரியாமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று தன் அறையில் அவர்களை மறைத்து வைத்திருப்பார் கவுண்டமணி. இதெல்லாம் ஒரு கட்டத்தில் தெரியவர, அதை எப்படி அனுகினார் ஆர்.சுந்தர்ராஜ்? ரம்பா எண்ட்ரியால் சரத்குமார்-நக்மா வாழ்க்கையில் என்ன நடந்தது? அறையில் மறைத்து வைத்திருந்த தன் மனைவியையும் மகனையும் பாதுகாத்தாரா கவுண்டமணி? என பல்வேறு கேள்விகளுக்கு கலகலப்பாக திரைக்கதை எழுதியிருப்பார் சுந்தர் சி.

90களில் ஊர் திருவிழாக்கள், இல்ல நிகழ்ச்சிகளில் டிவி மூலம் திரைப்படம் திரையிடப்படும் முறை இருந்தது. அந்த காலகட்டத்தில் கட்டாயம் ஜானகிராமன் திரைப்படத்தை பலரும் திரையிடுவார்கள். அந்த அளவிற்கு இல்ல நிகழ்ச்சிகளில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் படமாக ஜானகிராமன் படம் பார்க்கப்பட்டது. சிற்பியின் இசையில் பாடல்கள் அனைத்துமே மிக அருமையாக இருக்கும். ஒரே நேரத்தில் நக்மா, ரம்பா இரு கனவுக்கன்னிகள் நடித்ததால் இளசுகள் கூட்டம் அலை மோதியது. 

100 நாட்களை கடந்து ஓடிய ஜானகி ராமன், குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நிறைவான லாபத்தை பெற்ற திரைப்படம். அதுமட்டுமின்றி, சுந்தர் சி இயக்க வரலாற்றில் முக்கியமான படமாகவும் ஜானகிராமன் உள்ளது. 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜானகிராமன் திரைப்படம், இதே நாளில் 1997 அக்டோபர் 31 ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
CM Vijay:
CM Vijay: "ட்ராக்டர் ஓட்டி.. டீ குடிச்சு.." மதுராந்தகம் தொகுதியில் சுத்தி, சுத்தி ஓட்டு கேட்ட விஜய்!
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Maruti Fronx with ADAS: இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
Embed widget