மேலும் அறிய

இயக்குநர் எச் வினோத் பிறந்தநாளுக்கு வெளியான ஜனநாயகன் மேக்கிங் வீடியோ..ஹைப் ஏத்துறாங்களே!

விஜயின் ஜனநாயகன் படத்தை இயக்கிவரும் எச் வினோத் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஜனநாயகன் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

நடிகர் விஜயின் 69 ஆவது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , பிரியாமணி ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார் . 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் எச் வினோத் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் இயக்குநர் எச் வினோத்க்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஜன நாயகன் படக்குழு

ஜனநாயகன் படக்குழு வெளியிட்ட வீடியோ

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனமீர்த்தவர் எச் வினோத். தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிபெற்றது. பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை , வலிமை , துணிவு என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். சுவாரஸ்யமான அரசியல் கதைகளை இயக்குவதில் எச் வினோத் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அடுத்தபடியாக கமல் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க இருந்த நிலையில் படம் கைவிடப்பட்டு விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை எச் வினோத் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. விஜய் படத்தை இயக்குவது குறித்து பல்வேறு இயக்குநர்கள் இடையே கடும் போட்டி நிலவியது என்றாலும் இறுதியாக தனது அரசியல் பயணத்திற்கு கைகொடுக்கும் விதத்தில் ஏற்ற இயக்குநராக எச் வினோத்தை தேர்வு செய்தார் விஜய்

இன்று எச் வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜயை வைத்து தனது பாணியில் ஒரு சிறப்பான பொலிட்டிக்கல் த்ரில்லர் படத்தை எச் வினோத் வழங்குவார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றன

தலைப்பு செய்திகள்

நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Embed widget