Kaavaalaa video song: தளுக்கி குலுக்கி ஆடும் தமன்னா...! வெளியானது ஜெயிலரின் காவாலா முழு வீடியோ பாடல்!
ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் அனிருத் இசையும், தமன்னாவின் நடனமும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து ரசிக்க வைத்தது.
Kaavaalaa video song: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ’காவாலா’ முழு பாடல் யூடியூபில் வெளியாகி உள்ளது.
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கி இருக்கும் படம் தான் ஜெயிலர். தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரைப்படம் வெளியான பத்தே நாளில் ரூ.500 கோடி வரை வசூலில் சாதனை படைத்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.600 கோடியை தாண்டி வருகிறது. இதனால் ஜெயிலர் படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கும், இயக்குநர் நெல்சனிற்கும், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் விலையுயர்ந்த கார்களை கலாநிதிமாறன் பரிசாக வழங்கியுள்ளார். இதனால் ஜெயிலர் படம் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பாக காவலா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஹிட் அடித்தது. காவாலா பாடலில் அனிருத் இசையும், தமன்னாவின் நடனமும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து ரசிக்க வைத்தது. இந்த நிலையில் காவாலா பாடலின் ஒரிஜினல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள பாடலின் வரிகளை சில்பா ராவ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். காவலா பாடலில் இடம்பெற்றிருந்த தமன்னாவின் நடனம், ரீல்ஸ் போடும் அளவுக்கு இணையத்தில் டிரெண்டானது. இந்த நிலையில் காவலா பாடலின் முழு வீடியோவை இணையத்தில் தமிழி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The one you've all been looking forward to 😍 #Kaavaalaa video song is out now!
— Sun Pictures (@sunpictures) September 6, 2023
Telugu - https://t.co/3ZHosTbe6Q
Malayalam - https://t.co/3T5I3UdVMd
Kannada - https://t.co/wsVpXHXGzh
Hindi - https://t.co/q0WBybapDM@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial… pic.twitter.com/aU2qMfpg7v
இதற்கிடையே திரையரங்குகளில் பிரமாண்ட வெற்றியை பெற்ற ஜெயிலர் படம், இன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?
Jawan : ஜவானில் கெளரவ தோற்றத்தில் விஜய்? மாஸ் ஹீரோக்களை எண்ட்ரியை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..