Jailer: ஜெயிலர் ரஜினியின் மகனுக்கு சொந்தமாக இருக்கும் பிரபல உணவகம்..! எங்கே தெரியுமா..?
ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினியின் மகனுக்கு சென்னையில் பிரபலமான உணவகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவிக்கு சொந்தமாக சென்னையில் பிரபல உணவகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக வசூலை குவித்து வருகிறது. திரையரங்கில் வெளியான ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கு வசூலை வாரி குவித்ததால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஜெயிலர் படக்குழு உள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், ஜக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், விநாயகன், மிர்னா மேனன், கிஷோர், யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார்.
ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளை திரையில் பார்த்த ரசிகர்களை ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். வசூலில் ரூ.300 கோடியை தாண்டி ஜெயிலர் படம் சாதனை படத்து வருவதால், தமிழ் திரைத்துறை வட்டாரத்தையும் ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. போலீஸ் அதிகாரியான தனது மகனை கொலை செய்த கடத்தல் கும்பலை முத்துவேல் பாண்டியனாக நடித்திருக்கும் ரஜினி எதிர்ப்பதே ஜெயிலர் படத்தின் ஒன்லைன் கதை. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், ரஜினிக்கு மகனாகவும் வசந்த் ரவி நடித்து அசத்தி இருப்பார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் பெரிதாக பேசப்படும் வசந்த் ரவியின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னையில் உள்ள நம்ம வீடு வசந்த பவன் என்ற பிரபல உணவகம் வசந்த் ரவிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளரான முத்துகிருஷ்ணனின் மகன் தான் வசந்த் ரவி என்றும், இவர் இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், வசந்த் ரவியின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
2017ம் ஆண்டு ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்த தரமணி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வசந்த் ரவி தனது நடிப்பின் மூலம் பெரிதாக பாராட்டப்பட்டார். இதில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளையும் வசந்த் ரவி பெற்றுள்ளார். தொடர்ந்து 2021ம் ஆண்டு வெளிவந்த ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் படங்களில் நடித்துள்ள வசந்த் ரவி ஜெயிலர் படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.
முன்னதாக ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய வசந்த் ரவி, ஜெயிலர் படத்தில் நடித்தது தனது வாழ்க்கையின் ஒரு மைல்கல் என்றும், ரஜினி சாருடன் நடிப்போமா என்ற கனவு நிறைவேறியதாகவும் கூறியுள்ளார். மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மிகவும் எமோஷனலான காட்சிகள் இருந்ததாகவும், மறுபடியும் ரஜினியுடன் இணைந்து நடிக்க விருப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ரஜினி கண்டிப்பாக இருவரும் மீண்டும் இன்னொரு படம் பண்ணுவோம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Maamannan: சாதி பெருமைக்காக ஃபகத் பாசில் கொண்டாடப்பட்டாரா? : முதல் முறையாக பதிலளித்த மாரிசெல்வராஜ்