Jai BREAKING NEWS: ஜெய் நடிக்கும் படத்திற்கு 1 கோடி மதிப்பிலான விமான செட்.. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேட்டி..!
நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பிரேக்கிங் நியூஸ்”. இந்தப்படத்திற்காக 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்…
சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். ஜெய்யின் பங்களிப்பால் காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது.
View this post on Instagram
இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு படத்தொகுப்பாளராக ஆண்டனி பணியாற்றுகிறார். இந்தப்படத்திற்கு விஷால் பீட்டார் இசையமைப்பளாராக பணியாற்றுகிறார்.