மேலும் அறிய

IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !! 

பிரபல தொழிலதிபர் ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக்  பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார். இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது.., 

என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த சோதனை  8 ஆம்  அதிகாலை 3 மணி வரை நீண்டது. வீடு முழுவதும் அவர்கள் முழுமையாகச் சோதனை செய்தார்கள். அவர்கள் தேடி வந்த எந்த விஷயத்துக்கும் எனக்கு சம்பந்தமே இல்லை. எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர்கள் “Nil Seizure” என்று பதிவு செய்து சென்றார்கள்.

தேர்தல் பணம் அல்லது வேறு ஏதாவது தொடர்பாக வந்திருந்தாலும், எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தி சென்றார்கள். ஆனால் சில மீடியாவில் ஆயிரக்கணக்கான கோடிகள் கைப்பற்றப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் தவறு. நடந்ததை மட்டுமே உண்மையாக சொல்ல வேண்டும். இல்லாததை உருவாக்கி பேசுவது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இப்படி வரும் செய்திகள் அவர்களையும் பாதிக்கிறது.

இதற்கு முன்பே IT நோட்டீஸ் வந்தது. அதற்கு என் ஆடிட்டரும், வழக்கறிஞர்களும் பதில் அளித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். அந்த நிலைமையிலேயே மீண்டும் சோதனை நடந்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் நேரம் என்பதால் இப்படிச் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் முழுமையாக பதில் அளித்தோம். அவர்கள் திருப்தியுடன் சென்றார்கள். என்சிபி மற்றும் தேர்தல் அதிகாரிகளும் வந்து சோதனை செய்தார்கள். அவர்களும் எதுவும் இல்லை என்று கூறி சென்றார்கள். நான் எதையும் மறைக்கவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் சட்டப்படி தான் இருக்கிறது.

டெல்லி வழக்கு குறித்து பேச வேண்டுமென்றால், அது தற்போது கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நான் சட்டப்படி அந்த வழக்கை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். என் லீகல் டீமும் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கு நீண்டு கொண்டே இருக்கிறது. இது கோர்ட்டில் நடக்கும் ஒரு சாதாரண நடைமுறை. தீர்ப்பு வந்தவுடன் நான் நேரடியாக உங்களிடம் பகிர்வேன். அதற்கு முன்பே பெரிய தொகைகள் கூறி என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல. என் தொடர்புடைய எந்த இடத்திலும் ஒரு கிராம் கூட தவறான பொருள் கிடைக்கவில்லை. நான் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அரசியலிலிருந்து விலகி இருக்கிறேன். யாருக்கும் நான் பண உதவி செய்யவில்லை. பாண்டிச்சேரி அல்லது சென்னை என்று எங்கும் நான் பணம் கொடுத்ததில்லை. நான் என் குடும்பம், வேலை, மற்றும் கோர்ட் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த சில நாட்களில் பல துறைகள் என்னை விசாரித்துள்ளன. அதில் IT துறை மட்டும் முறையாகவும் தெளிவாகவும் செயல்பட்டது. மற்ற துறைகளும் வந்து சோதனை செய்து எதுவும் இல்லை என்று கூறி சென்றன. என் வீட்டில் சாதாரண குடும்ப செலவுக்கான சுமார் 40,000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதற்கும் மேலாக எந்தப் பெரிய தொகையும் இல்லை. இதை தயவுசெய்து சரியாக பதிவு செய்யுங்கள்.

தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என்னை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம். நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். என் நிலையை புரிந்து கொண்டு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம். நான் தற்போது என் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் என் தயாரிப்பில் உருவாகும் “மங்கை” மற்றும் “இறைவன் மிகப்பெரியவன்”  திரைப்படங்களை உங்களிடம் கொண்டு வருகிறேன். நன்றி.

தலைப்பு செய்திகள்

இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Chennai Power Cut: சென்னைல சனிக்கிழமை (26.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னைல சனிக்கிழமை (26.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Embed widget