மேலும் அறிய

Jackie Chan: வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்!

Jackie Chan Birthday: “ஒவ்வொரு முறையும் இந்த நம்பரைக் கேட்கும்போது, ​​என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும் - எனக்கு ஏற்கெனவே 70 வயது ஆகி விட்டதா என்று” - ஜாக்கி சான்

குழந்தை நட்சத்திரம் டூ உலகம் வியக்கும் நடிகர்

காமெடி கலந்த அசாத்திய ஆக்‌ஷன், குங் ஃபூ கலை, துள்ளலான உடல் மொழி, படபட நடிப்பு, உயிரைப் பணயம் வைக்கும் ஸ்டண்ட்ஸ் என 90ஸ் கிட்ஸை திரையின் முன் கட்டிப்போட்டு, உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகர் ஜாக்கி சான் (Jackie Chan).

Jackie Chan: வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்!

60களில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தினைத் தொடங்கி, சிறு சிறு வேடங்கள், ஸ்டண்ட் மாஸ்டர் என சினிமாவில் படிப்படியாக வளர்ந்து பின் ஹீரோவாகி ஹாலிவுட் வரை பயணித்த ஜாக்கி சானின் திரைப்பயணம் அத்தனை எளிமையானது அல்ல! பல ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாய் தன் தாய் மொழியான சீன மொழி படங்களில் மட்டுமே முதலில் நடித்து, தன் தனித்துவ பாணியால் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ரசிகர்களைக் கவர்ந்து, பின் கண்டம் தாண்டி பிரபலமானார்.

90ஸ் கிட்ஸின் நாயகன்

ஆர்மர் ஆஃப் காட், போலீஸ் ஸ்டோரி, ரஷ் ஹவர், கராத்தே கிட், ஷாங்காய் நைட்ஸ் என அவரது பல திரைப்படங்கள், ஜாக்கி சானின் சாகசங்கள் கார்ட்டூன் என இன்றும் தொடர்ந்து பல தரப்பு ஆடியன்ஸால் ரசிக்கப்பட்டு வருகிறார். 2016ஆம் ஆண்டு தன் திரைப் பணிக்காக கௌரவ ஆஸ்கர் விருதினை வென்ற ஜாக்கி சான் முன்பு போல் ரிஸ்க் எடுக்கும் ஸ்டண்ட் செய்து படங்களில் நடிக்காமல் தற்போது தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் கவலை

Jackie Chan: வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்!

சமீபத்தில் நரை முடியுடன் பொதுவெளியில் ஜாக்கி சான் தோன்றிய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு 90ஸ் கிட்ஸ்களை பெரும் கவலையில் ஆழ்த்தி பேசுபொருளானது. இந்நிலையில், இன்று தன் 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜாக்கி சான் உருக்கமான பதிவு ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

‘எனக்கு 70 வயதா..’

“இன்றைக்கு முன்பே, பல நண்பர்கள் எனக்கு நினைவூட்டினார்கள்: "ஜாக்கி, இது உங்கள் 70வது பிறந்தநாள்!" என்று. ஒவ்வொரு முறையும் இந்த நம்பரைக் கேட்கும்போது, ​​என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும் - எனக்கு ஏற்கெனவே 70 வயது ஆகி விட்டதா என்று. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பிறகு என் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம், என் பெரிய சகோதரர் சம்மோ ஹங் ஒருமுறை கூறிய விஷயம். "வயது முதிர்வு என்பது ஒரு அதிர்ஷ்டமான விஷயம்." குறிப்பாக எங்களைப் போன்ற ஸ்டண்ட் நபர்களுக்கு, வயதாகிவிடுவது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று எங்களுக்கே தெரியாது.

‘62 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்’

சில நாள்களுக்கு முன்பு என், நிறைய நண்பர்கள் இணையத்தில் எனது சில சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டனர். நான் இந்த வாய்ப்பை அனைவருக்கும் இதை தெரியப்படுத்த பயன்படுத்திக் கொள்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்!

இது எனது சமீபத்திய படத்திற்கான ஒரு கதாபாத்திரத்தின் தோற்றம். அந்த கேரக்டருக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி, வயதான தோற்றம் வேண்டும். பல ஆண்டுகளாக, நான் சவாலான ஸ்டண்ட் செய்வது ஆகட்டும், அல்லது ஒரு திருப்புமுனை பாத்திரமாக நடிப்பதாகட்டும், ஒரு திரைப்படத்திற்காக புதிய விஷயங்களை முயற்சி செய்ய எப்போதும் தயாராக இருந்திருக்கிறேன்.

நான் 62 ஆண்டுகளாக இந்த பொழுதுபோக்கு பிஸ்னஸில் இருக்கிறேன். ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் மதிக்கிறேன், ஏனென்றால் நான் இன்றும்கூட படப்பிடிப்பு பணியில் இருந்தபடி இருக்கிறேன்.

சமீபத்தில் எனது பணியாளர்கள் எனது ​​மறக்கமுடியாத பல புகைப்படங்களைக் கண்டறிந்தனர். இந்தச் செய்தியுடன் அவற்றில் தேர்ந்தெடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன். இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போது பல இனிய நினைவுகள் வருகின்றன. நான் சொல்லக்கூடியது என்னவென்றால், நான் திரைப்படம் தயாரிப்பதை விரும்புகிறேன் மற்றும் நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்.

View this post on Instagram
 
A post shared by Jackie Chan 成龍 (@jackiechan)

உங்கள் அனைவரின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும் நன்றி. எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” எனப் பகிர்ந்துள்ளார். ஜாக்கி சானின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை நெகிழ வைத்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Irunga Bhai:
Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
Embed widget