(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: பாகிஸ்தானிய பாடல் பாடி உருக வைத்த எல்லை வீரர்! உணர்ச்சிப் பெருக்கில் நெட்டிசன்கள்!
இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் இணைந்து கித்தார் வாசித்தபடி பாடும் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
கவாலி , கஸல் ஆகிய இசை வகைகளைச் சேர்ந்த பாடல்களை இசையமைத்துப் பாடுவதில் உலக அளவில் சிறந்த கலைஞர்களாக விளங்குபவர்கள் ரஹத் ஃபதே அலி கான் மற்றும் நஸ்ரத் ஃபதே அலி கான்.
இவர்கள் இசையில் வந்த பாகிஸ்தானிய பாடல் ’ஆஃப்ரீன் ஆஃப்ரீன்’. ரஹத் ஃபதே அலி கான், மொமினா முஸ்தேசன் இணைந்து பாடிய இந்தப் பாடல் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.
நஸ்ரத் ஃபதே அலி கான் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் வரிகள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், முன்னதாக இந்தப் பாடலை இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் இணைந்து பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி காண்போரை உருக வைத்து வருகிறது.
ஏற்கெனெவே இந்தப் பாடலுக்கும் ரஹத் ஃபதே அலி கானின் குரலுக்கும் பலர் அடிமையாக உள்ள நிலையில், கான்ஸ்டபிள் விக்ரம் என்பவரின் ஜீவன் நிறைந்த குரலில் ஒலிக்கும் இந்த வீடியோ, இணையவாசிகளை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.
View this post on Instagram
இவருடன் கான்ஸ்டபிள் நீல் என்பவர் இணைந்து கித்தார் வாசிக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பல பார்வையாளர்களைப் பெற்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்