Arabic Kuthu Song: பீஸ்ட்-ல் அரபிக்குத்து இல்லையா? நெல்சனிடம் ரெக்வஸ்ட் வைக்கும் நெட்டிசன்கள்! ஷாக்கில் ஃபேன்ஸ்!!
பீஸ்ட் படத்தில் நடுவே அரபிக்குத்து பாடல் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
வெளியான 10 மணி நேரத்திலேயே 16 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய இந்தப்பாடல், ஒரே நாளில் அதிகபார்வையாளர்களை கடந்த லிரிக்கல் வீடியோ என்ற சாதனையையும் படைத்தது. உலக அளவில் பிரபலமான இந்தப்பாடலில் விஜய் ஆடுவது போலவே, ஆடி வீடியோக்களை ரெடி செய்து, தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் அரபிக்குத்து பாடல், படத்தின் நடுவில் இடம்பெறாமல், பட இறுதியில் இடம் பெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைக்கேள்விப்பட்ட ரசிகர்கள், அரபிக்குத்து பாடல் படத்துனுள் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
டாக்டர் படத்திலும் இதே போன்ற ப்ரோமோஷன் ஸ்டேட்டர்ஜியை பயன்படுத்தி ரீச் ஆன 'செல்லமா' பாடல் படத்தின் நடுவில் இடம்பெறாமல், இறுதியிலே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.