மேலும் அறிய

நம்ம அயர்ன்மேனா இது..? மனசெல்லாம் ரணம் ஆயிடுச்சே..! வைரலாகும் வயதான புகைப்படம்..!

அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியரின் வயதான புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மனம் வருந்தி வருகின்றனர்.

ராபர்ட் டவுனி ஜூனியர் என்ற பெயரைச் சொன்னால் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, அயர்ன்மேன் அல்லது டோனி ஸ்டார்க் என்று சொன்னால் போதும் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மார்வெல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்லப் போனால் இந்த பூமியை தானோசிடம் இருந்து தன் உயிரை கொடுத்து காப்பாற்றியது அயர்ன்மேன்தான் என்று சொல்லும் அளவிற்கு அயர்மேன் மேல் கொண்ட பைத்தியம் கொண்ட ரசிகர்கள் தமிழ்நாட்டிலே உள்ளனர்.

அந்த அயர்ன்மேன் கதாபாத்திரத்தை அந்தளவு ரசிகர்களின் ஆழ்மனதில் ஒரு உறவாகவே மாறும் அளவிற்கு பதியும் அளவிற்கு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர். அவெஞ்சர்ஸ் படத்திற்கு பிறகு டூ லிட்டில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

நம்ம அயர்ன்மேனா இது..? மனசெல்லாம் ரணம் ஆயிடுச்சே..! வைரலாகும் வயதான புகைப்படம்..!

இந்த நிலையில், ராபர்ட் டவுனி ஜூனியர் அவ்வப்போது தனது புகைப்படங்களை, வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் மிகவும் வயதாகி தலையின் முன்பக்கம் எல்லாம் வழுக்கை விழுந்த நிலையில், ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளார். இந்த படத்தை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து தங்களது அயர்ன்மேனுக்கு வயதாகிவிட்டது என்று வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். 

இது அவரது இயல்பான புகைப்படம்தான் என்றாலும், மற்ற படங்களில் தொப்பி அணிந்திருப்பார். இந்த படத்தில் தொப்பியும் இல்லாமல், வயதான தோற்றத்தில் இருக்கும் ராபர்ட் டவுனி ஜூனியரை பார்க்கும் அயர்ன்மேன் ரசிகர்கள் சில நிமிடங்கள் திகைத்துதான் போயிருப்பார்கள் என்பதே உண்மை.

நம்ம அயர்ன்மேனா இது..? மனசெல்லாம் ரணம் ஆயிடுச்சே..! வைரலாகும் வயதான புகைப்படம்..!

அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் வரிசையின் அனைத்து கதாநாயகர்களையும் இணைத்து உலகளவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமைக்கு சொந்தமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் பிரதான நாயகனான அயர்ன்மேன் இறந்தபோது உலகெங்கும் உள்ள மார்வெல் ரசிகர்கள் கண்கலங்கினர். தற்போது, அந்த அயர்ன்மேன் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்க்கும்போது இன்னும் வருத்தமாகதான் உள்ளது. அயர்ன்மேன் கதாபாத்திரம் என்பது 90ஸ் கிட்ஸ்கள் இழந்தவற்றில் முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1965ம் ஆண்டு பிறந்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு தற்போது 57 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2008ம் ஆண்டு முதல் அயர்ன்மேனாக நடித்து வந்தார். மேலும், புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத்திலும் இவர்தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget