இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு
இசைஞானி இளையராஜா கைவண்ணத்தில் இதுவரை1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து 4,500க்கு அதிகமான பாடல்களை உருவாகியுள்ளார்.
இசை என்பது பேரூற்று என்றால் அதில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை வற்றாத பேரூற்று.அவரது சினிமா இசை அனுபவம். அவரது ஒவ்வொரு பாடலும் வரலாறு எனச் சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு பாடல் இசையமைப்புக்கும் பின்னணியில் அப்படி அழுத்தமானதொரு கதை இருக்கும்.
இசைஞானி இளையராஜா கைவண்ணத்தில் இதுவரை1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து 4,500க்கு அதிகமான பாடல்களை உருவாகியுள்ளார். இந்தநிலையில், இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் அவர் உருவாக்கிய பாடல்களை பயன்படுத்தப்பட்டதாக அவர் சில இசை குழு மீது காப்புரிமை கேட்டு கடந்த 2014 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, மலேசியாவைச் சேர்ந்த அகி மியூசிக், சென்னையின் எக்கோ ரெக்கார்டிங், ஆந்திராவின் யுனிசிஸ் இன்போ சொல்யூஷன், மும்பையைச் சேர்ந்த கிரி டிரேடிங் நிறுவனம் உள்ளிட்ட இசைக் குழுமத்திற்கு எதிராக 2014-ல் அவர் தொடுத்த சிவில் வழக்கில் பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் பிரிவு 57 க்கு இணங்க அவர்கள் பயன்படுத்த காப்புரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில், இதைஎதிர்த்து பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தநிலையில், பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் ,அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்.
தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு" பிரத்தியேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ,தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து இது குறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்