மேலும் அறிய

Indian 2 Shooting: அப்புறம் என்னப்பா ஷூட்டிங் கிளம்பலாமா? - இந்தியன் 2 குறித்து வெளியான புதிய தகவல்

ஷங்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்ட கமல், ‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! என தெரிவித்திருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  அந்த வகையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன்-2 படத்தின் அறிவிப்பு வெளியானது.

2018 ஆம் ஆண்டு இதன் அறிவிப்பு வெளியாகி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு நடந்து வந்தது. அனிருத் இசையமைப்பில்  காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார்.  அதன்பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கருக்கு மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, நடிகர் விவேக் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது போன்ற பல நிகழ்வுகளால் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும் சினிமாவுக்கு விலக்கு அளித்துள்ள காஜலுக்கு பதிலாக இப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தான் இப்படத்தை நடிக்கவுள்ளதை காஜல் அகர்வால் உறுதி செய்தார். மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தது. இதனிடையே நேற்று ஷங்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்ட கமல், ‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! என தெரிவித்திருந்தார். அதற்கு இயக்குனர் ஷங்கர் நிச்சயமாக இந்தியரே, உங்கள் வாழ்த்துஎன் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது எனத் தெரிவித்திருந்தார். 

இதனால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதை இருவரும் மறைமுகமாக தெரிவித்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 70% சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 30 சதவீத படப்பிடிப்பில் முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், விரைவில் கமல்ஹாசன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Embed widget