மேலும் அறிய

Independence Day Songs: போராட்டக்களம் முதல் சுதந்திர இந்தியா வரை.. புல்லரிக்கச் செய்யும் தேச பக்தி பாடல்கள்..!

Independence Day Songs: தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பாடல்களில் தேச பக்தியை ஊட்டும் பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Independence Day Songs: தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பாடல்களில் தேச பக்தியை ஊட்டும் பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

தாயின் மணிக்கொடி

தமிழ் சினிமா தேச பக்தி பாடல்கள் என வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடம் வகிக்கும் பாடலாக எப்போதும் இருப்பது, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்கிந்த் படத்தில் இடம் பெற்றுள்ள, “ தாயின் மணிக்கொடி” பாடல் தான். குறிப்பாக இந்த பாடலில் இடம் பெற்றுள்ள, “ சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் சொல்லுகிறோம் எங்கள் முதல் வணக்கம்” எனும் வரிகளை கேட்கும்போது மனதிற்குள் ஒருவித உணர்வை ஊட்டும். டெக்னாலஜி வளர்ந்த இந்த யுகத்தில் ஸ்டோரிகளிலும், ஸ்டேட்டஸ்களிலும் நிரம்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. 

கப்பலேறி போயாச்சு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய திரைப்படம் இந்தியன். இப்படத்தில் வரும் கப்பலேறி போயாச்சு பாடல் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு கச்சிதமாய் பொருந்திப் போகக்கூடிய பாடல்களில் ஒன்று. குறிப்பாக  ”கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா விடியும் வரையில் போராடினோம் உதிரம் மதியாய் நீராடினோம்” இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் கப்பல் மூலமாக வெளியேறினார்கள். 

இதனால் இந்த பாடல் துவங்குவதே அதனை நினைவு படுத்துவதைப் போல உள்ளது. நடு இரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதையும் இப்பாடல் சுட்டிக்காட்டும். மேற்கொண்டு வரும் வரிகளும் சுதந்திர போராட்டங்களை போற்றும் வகையில் அமைந்திருக்கும் என்பதால், சுதந்திர தின கொண்டாட்ட பாடல்களில் இந்த பாடல் டாப் லிஸ்ட்டில் இருக்கும். 

Independence Day Songs: போராட்டக்களம் முதல் சுதந்திர இந்தியா வரை.. புல்லரிக்கச் செய்யும் தேச பக்தி பாடல்கள்..!

தமிழா.. தமிழா..

சுந்தந்திர தினமோ குடியரசு தினமோ நிச்சயம் கே.டிவில் இடம் பெறக்கூடிய படங்களில் ஒன்று ரோஜா. இந்த படத்தில் உள்ள தமிழா தமிழா பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இந்த பாடலில் வேற்றுமையில் இந்தியா என்பதை மிகவும் வலிமையாக எடுத்துக்கூறும் பாடல் வரிகள். குறிப்பாக ”நவபாரதம் பொதுவானது இது வேர்வையால் உருவானது பல தேகமோ எருவானது அதனால் இது உருவானது” இந்த வரிகள் சுதந்திர போராட்டக் களத்தில் பலர் தங்களின் உயிரை தியாகம் செய்து அதில் இந்த புதிய நாடு உருவாகியுள்ளது என்பதை க் க்விளக்குவதாக உள்ளது. 

அச்சம் அச்சம் இல்லை

இந்திரா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அச்சம் அச்சம் இல்லை பாடலும் சுதந்திர தின கொண்டாட்ட பாடல்களில் கட்டாயம் இருக்கும் பாடல்தான். இந்த பாடலின் இசையும் வரியும், பாடல் காட்சிப் படுத்தப்பட்ட திரைக்கதையும் இந்த பாடலை தேச பற்றுப் பாடலாக மாற்றி விட்டது. ”காலம் மாறிப்போச்சு நம் கண்நீர் மாறிபோச்சு நாளை நல்ல நாளை எந்த நம்பிக்கை உண்டாச்சு” மேலும் அந்த பாடலில் உள்ள வரிகள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நமக்கு சுதந்திர இந்தியா கிடைத்துள்ளது என்பது போல் இருக்கும்.  

Independence Day Songs: போராட்டக்களம் முதல் சுதந்திர இந்தியா வரை.. புல்லரிக்கச் செய்யும் தேச பக்தி பாடல்கள்..!

தாய் மண்ணே வணக்கம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக உருவாக்கிய தனிப் பாடல் தான் தாய் மண்ணே வணக்கம். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நமக்கு புல்லரித்துவிடும். அப்படியான தனிப்பாடல், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நெருங்கிக்கொண்டு இருக்கும் போது மும்பை வான்கடே மைதானத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் தொடங்கி இந்த போட்டியியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் வரை அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளிய பாடல் இது. இந்த பாடல் சுதந்திரத்தையும் நாட்டு பற்றையும் போற்றும் விதமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget