மேலும் அறிய

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் பவள விழா சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இதே நாளில் வெளியாகி ரசிகர்களில் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற தமிழ் திரைப்படங்களை காணலாம். 

1. முள்ளும் மலரும்

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

1978 ஆம் ஆண்டு மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் தமிழ் சினிமாவின் அண்ணன் - தங்கை பாசத்தை சொல்லும் டாப் 10 சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தில் ரஜினிகாந்த்,ஷோபா,சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் ரஜினியின் ஆல்டைம் ஃபேவரைட் படமாகும். 

2. ஜானி 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

1980 ஆம் ஆண்டு மீண்டும் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜானி. திருடன், சவரத் தொழிலாளி என இரண்டு உருவ ஒற்றுமைக் கொண்ட இரண்டு நபர்களின் கதையை தனது மேஜிக்கலான திரைக்கதையால் மகேந்திரன் ரசிக்க வைத்திருப்பார். இளையராஜா இசையில் இப்படத்தில் ஸ்ரீதேவி, தீபா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஸ்டைல் தவிர்த்து ரஜினி சிறந்த நடிகர் என்பதற்கு உதாரணம் காட்டப்படும் படங்களில் ஜானிக்கு முக்கிய இடம் உண்டு. 

3. நெற்றிக்கண் 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விசுவின் திரைக்கதை, வசனத்தில் ரஜினி, மேனகா சுரேஷ், சரிதா, லட்சுமி, விஜயசாந்தி உள்ளிட்ட பலரும் நடித்த படம் நெற்றிக்கண். அப்பா -மகன் என 2 வேடம் ஏற்று  ரஜினி நடித்தார். இதில் பிளேபாய் கேரக்டராக வலம் வந்த அப்பா ரஜினி கேரக்டரில் மாஸ் காட்டியிருப்பார். 

4. முதல் மரியாதை 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்த படம் முதல் மரியாதை. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை போல படமும் என்றும் எவர்க்ரீன் தான்..!

5. ஊமை விழிகள் 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

முன்னணி நடிகராக  மாறிய விஜயகாந்த் புதிய திறமையான நபர்களை ஊக்குவித்தார் என்பதற்கு ஊமை விழிகள் படம்  சிறந்த உதாரணம். அரவிந்த ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், கார்த்திக், சந்திரசேகரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்த இப்படம் தமிழ்சினிமாவில் புதிய டிரெண்ட் செட்டை உருவாக்கியது.

6. மௌனராகம் 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

1986 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கத்தில் மோகன்,கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரும் நடித்த படம் மௌன ராகம். இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் படம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படத்தின் கதையை அடிப்படையாக கொண்டே அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

7. அமர்க்களம் 

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன் உட்பட பலரும் நடித்த அமர்க்களம் திரைப்படம் அஜித்தின் நடிப்பை வேறு கோணத்தில் வெளிப்படுத்தியிருந்தது. இப்படத்தின் இணைந்த அஜித் - ஷாலினி ஜோடி பின்னாளில் ரியல் ஜோடிகளானது குறிப்பிடத்தக்கது. 

8. பாபா

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரஜினியின் வாழ்க்கைக்கு நெருக்கமான பாபாஜி பற்றியது என்பதால் அவர் மிகுந்த ஆர்வமுடன் இப்படத்தில் நடித்தார். படையப்பா படத்திற்குப் பின் 3 ஆண்டுகள் கழித்து ரஜினி பாபா பட அறிவிப்பை வெளியிட்டார். இது அன்றைய நாளிதழ்களின் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்தது. படம் ரிலீசான சமயத்தில் ரஜினி - பாமகவினர் இடையேயான மோதல் ரஜினியின் செல்வாக்கை தெளிவுப்படுத்தியது. ஆனால் படம் நஷ்டமடைந்ததால் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திரும்ப அளித்தார். 

9. அட்டக்கத்தி

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

2012 ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பா.ரஞ்சித் தினேஷ்,  நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அட்டக்கத்தி படம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் அவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தனது படத்தின் மூலம் பேசிய அரசியலே வேறு.. 

10. அஞ்சான்

‛தமிழ் சினிமாவும்... சுதந்திர தினமும்...’ இதே நாளில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் இதோ!

2015 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் இன்று வரை சூர்யா ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. சூர்யாவின் ராஜூ பாய் கேரக்டரும், படம் ரிலீஸான சமயத்தில் லிங்குசாமி கொடுத்த நேர்காணல் ஒன்றும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்

Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்

Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?

Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்

மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

Embed widget