Ileana pregnancy : 'காத்திருக்கேன் குட்டி டார்லிங்..' - கர்ப்பத்தை உறுதிப்படுத்திய இலியானா!
Ileana pregnancy : “கூடிய விரைவில்.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என் குட்டி டார்லிங்” என இலியானா பதிவிட்டுள்ளார்
இடுப்பழகி இலியானா கர்ப்பமாக இருப்பதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டில் ரவி கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான இலியானா, அமிர் கான், மாதவன், ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.தெலுங்கு படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் மத்தியில் பரிச்சயமாக இருந்து வந்த இலியானா, ‘இருக்கானா இடுப்பு இருக்கானா இல்லையானா இலியானா..’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடி ஒரே படத்தில் பிரபலத்தின் உச்சியை அடைந்தார்.
தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கூடிய விரைவில்.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என் குட்டி டார்லிங்” என்ற கேப்ஷனுடன், குழந்தைகள் அணியும் உடையையும், மாமா (அம்மா) என்ற செயினின் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
இலியானாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, அசால்ட்டாக போட்டு வாங்கி ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் , கத்ரீனா கைஃபின் அண்ணனான செபாஸ்டின் லாரன்ட் மிச்சலை டேட் செய்து வருவதாக இலியானா தெரிவித்தார். இதனால், பல நாட்களாக அனைவரையும் குழப்பிய கிசுகிசு உறுதிபடுத்தப்பட்டது. இருப்பினும், இருவருக்கும் திருமணமாகி விட்டதா என்ற கேள்வி பலரது மனங்களில் உள்ளது. கர்ப்பமாக உள்ள இலியானாவிற்கும், அக்குழந்தைக்கு அப்பாவான செபாஸ்டியனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த செபாஸ்டியன்?
காஷ்மீரைச் சேர்ந்த மொஹமத் கைஃப்பிற்கும், பிரட்டனை சார்ந்த சுசன் டர்கோட்டிற்கும் பிறந்தவர் கத்ரீனா கைஃப். இவருக்கு, ஸ்டபெனி, க்ரிஸ்டைன், நடாஷா என மூன்று மூத்த சகோதரிகளும், மெலிசா, சோனியா, இசபெல் என மூன்று இளைய சகோதரிகளும் செபாஸ்டியன் எனப்படும் மூத்த சகோதரரும் உள்ளனர். கத்ரீனாவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இதனால், கத்ரீனா அவர் அப்பாவுடனான உறவை துண்டித்துவிட்டார். இலியானா ஃபாலோ செய்யும் செபாஸ்டியனின் இன்ஸ்டா பக்கதையும் கத்ரீனா பின் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்துக்கள்
தான் கர்ப்பமாக உள்ள செய்தியை சூசகமாக சொன்ன இலியானாவின் இன்ஸ்டா போஸ்டில், பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சமூக வலைதள பிரபலங்கள் முதல் திரையுலகினர் வரை அனைவரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இலியானாவின் அம்மாவாகிய சமீரா இலியானா டி க்ரூஸ், ‘இந்த உலகிற்கு என்னுடயை பேரக் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என பதிவிட, விக்கி கெளஷல் மற்றும் கத்ரீனாவின் ரசிகர்கள் உருவாக்கிய இன்ஸ்டா பக்கத்தில், “விக்கி கத்ரீனா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக உணர்கிறோம்.” என கமெண்ட் செய்துள்ளனர்.