(Source: ECI/ABP News/ABP Majha)
Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்!
இளையராஜா ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்
இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
திரைப்படமாகும் இளையராஜா வாழ்க்கை வரலாறு
இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இளையாராஜாவாக தனுஷ் நடிப்பது குறித்தும் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெற்றிமாறன் , கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இளையராஜா குறித்து விரிவாக பேசினார்கள். இவர்கள் தவிர்த்து இளையராஜா குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இளையராஜா பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை அவர் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
இளையராஜா ஒரு மெஜிசியன்:
”ஒரு இசையமைப்பாளர் என்றால் அவருக்கு ஒரு கால வரையரையை நாம் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் இந்த காலத்தில் தொடங்கி இந்த காலம் வரை இருந்தார் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் இளையராஜாவை அப்படி குறிப்பிட முடியாது. ஒரு முறை இசை நிகழ்ச்சி ஒன்றில் நாயகன் படத்தில் வரும் ’ நிலா அது வானத்து மேல” ஒரு தாலாட்டுப் பாட்டு என்று . ஆனால் மணிரத்னம் படத்தில் அந்தப் பாடல் ஒரு கிளர்ச்சிமிக்க பாட்டாக மாறியிருக்கும். ஒரு சிறிய பாட்டில் சின்ன மாறுதல்களை செய்து ஒரு புது உணர்ச்சியையே நமக்கு வழங்கிவிடுகிறார்.
இப்போது அவருடைய பாட்டை யோசித்தால் கூட நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் முதற்கொண்டு சின்ன சின்ன பூச்சிகள்வரை நம்மைச் சுற்றி இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. அது வெறும் அவருடைய இசையின் பயனமாக இல்லாமல் அவருடைய தொழிலாகவும் அது வளர்ந்திருக்கிறது. வருடத்தின் 365 நாளில் ஒரு நாள் தவறாமல் அவரது அலுவலக வாசலில் குறைந்தபட்சம் பத்து இயக்குநர்கள், இருபது தயாரிப்பாளர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். தங்களது படத்திற்கு இசையமைக்கச் சொல்லி அவர்கள் கேட்டு வருவார்கள்.
புகைப்பட கலைஞர்:
இது சுமார் 15 முதல் 20 வருடங்களுக்கு நடந்து வந்த விஷயம். ஒரு மேஜிசியன் போல அவர் இருந்திருக்கிறார். இளையாராஜா ஒரு புகைப்பட கலைஞர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். பாலுமகேந்திரா சார் இளையராஜாவின் புகைப்படம் எடுக்கும் திறனைப் பார்த்து தன்னுடைய கேமராவை அவருக்கு கொடுத்திருக்கிறார். இப்படி ஒருவரின் வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. இந்தப் படத்தின் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும் அதை இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷ் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறேன் “ என்று ரங்கராஜ் பாண்டே கூறினார்.