Ilayaraja:செருப்பு அணிந்து கொண்டு ஆசீர்வாதம் செய்த இளையராஜா... கொந்தளித்த நெட்டிசன்கள்... காரணத்தை கூறிய கன்னிகா
இளையராஜா செருப்பு அணிந்து கொண்டு ஆசிர்வாதம் செய்ததால் கொந்தளித்த நெட்டிசன்கள்- கன்னிகா அளித்த பதில்
பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதி இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த புகைப்படத்தில் இளையராஜா செருப்பு அணிந்தபடி இருந்தது குறித்து விமர்சித்த பலருக்கும் நடிகை கன்னிகா பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா நேற்று முந்தினம் தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். சினேகந் கன்னிகா தம்பதி அவரை நேரில் சந்தித்த ஆசீர்வாதம் வாங்கினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ‘ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகை கன்னிகா ‘அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க’ என்று பதில் கூறியுள்ளார். ஆசீர்வாதம் செய்யும் போது ஏன் இளையராஜா செருப்பை கழட்டவில்லை என்று இணைத்தில் பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், தனது பதில் மூலம் கன்னிகா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். தனியார் தொலைக்காட்சியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்கள் முடிந்திருந்தாலும், 2017-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசன் மக்களிடம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரவ் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சினேகன் 2-வது இடம் பிடித்தார்.
40-வயதை கடந்த சினேகன் சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சினேகன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில் இவரது திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் சினேகனின் திருமணத்திற்கு செல்ல முடியாததால், இளையராஜா, சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.