Rishab Shetty: மணிரத்னத்தின் தீவிர ரசிகன்..வெற்றிமாறனுடன் படம் பண்ணனும்.. ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி பேட்டி!
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படம் தமிழில் டப் செய்யப்பட்டு இன்று வெளியான நிலையில், ரசிகர்களை அப்படம் பெரிதும் கவர்ந்துள்ளது.
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில், காந்தாரா குறித்த தகவலால் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று வெளியானது.
படம் பார்த்த பலரும் பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக இப்படத்தை நடிகர்கள் தனுஷ், கார்த்தி, ப்ரித்வி ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி தள்ளினர்.
View this post on Instagram
இதனிடையே காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி அப்படத்தின் வெற்றியை கொண்டாட கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து மற்ற மொழிகளில் டப் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதால் நேரம் காலம் இல்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூர் வந்த பிறகு பிற மொழிகள் படம் பார்த்து ஹீரோக்களுடைய ஸ்டைலை காப்பி பண்ணுவேன். அதன்பிறகு ஹீரோவாக நடிக்க ஆசை வந்தது.
அதேசமயம் நான் மணிரத்னத்தின் தீவிர ரசிகன். அவருடைய எல்லா படங்களையும் பார்ப்பேன். காந்தாரா ரிலீசான அதே நாளில் தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் வெளியானது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. அப்போது ரிஷப் ஷெட்டியிடம் உங்களை கவர்ந்த இயக்குநர்கள் யார் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பாலசந்தர், மணிரத்னம், கமல்ஹாசன் என நிறைய பேர் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
இப்ப ட்ரெண்டிங்கில் உள்ள இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களுடன் நேரடி தமிழ்ப்படம் பண்ண வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, யோசிக்காமல் வெற்றிமாறன் பெயரை ரிஷப் ஷெட்டி யோசிக்காமல் தெரிவித்தார். அவரின் மிகப்பெரிய ரசிகன் நான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி விகடன்