Idli Kadai: இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதையா? கேள்வி எழுப்பிய பாரிதாபங்கள் கோபி! சட்டென பதில் சொன்ன தனுஷ்
இட்லி கடை திரைப் படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதை என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு தனுஷ் பதிலளித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதை என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு தனுஷ் பதிலளித்திருக்கிறார்.
தனுஷின் இட்லி கடை:
நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த காலங்களில் உருவான ராயன் மற்றும் நிலவுக்கு என் மீது என்னடி கோபம் ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களையே பெற்றது. இதனால் அடுத்ததாக தான் இயக்கும் படம் நிச்சயம் ரசிகர்கள் விரும்பும் படி இருக்க வேண்டும் என்று தனுஷ் முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்டது. இச்சூழலில் தான் நடிகர் தனுஷ் தானே நாயகனாக நடித்து இயக்கிய இட்லி கடை திரைப்படம் உருவானது. இந்த படம் அக்டோர் மாதம் வெளியாக உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜின் கதையா?
இச்சூழலில் தான் படத்திற்கான விளம்பரவேலைகளில் தீவிரமாக இருங்கியுள்ளது இட்லி கடை படக்குழு. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரமாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.
அவருடன் பரிதாபங்கள் யூ டியூப் சேனலின் கோபி, சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, "இந்தத் திரைப்படம் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்தது என்கிறார்களே?” என்று கோபி கேட்டார். அதற்குப் பதிலளித்த தனுஷ், "அதெல்லாம் இல்லை. நான் எனது கிராமத்தில் என்னை பாதித்த சில கதாபாத்திரங்களை வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறேன். முழுக்க முழுக்க இது எனது சொந்த கற்பனைதான்" என்று பதிலளித்தார். தனுஷ் பேசிய வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





















